ஜனவரி 09, சென்னை (Chennai): தமிழ்நாடு போக்குவரத்து துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும், ஓய்வூதிய திட்டம், கருணை அடிப்படையில் விண்ணப்பித்து காத்திருக்கும் தொழிலாளர்களின் குடும்பத்திற்கு பணிகள் வழங்க வேண்டும் உட்பட 6 அம்சங்கள் கொண்ட கோரிக்கையை முன்வைத்து தமிழ்நாடு போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது.
போக்குவரத்து ஊழியர்கள் சங்கத்தின் போராட்டம்: சிஐடியு, ஏஐடியுசி உட்பட 25 தொழிற்சங்கம் சார்பில் வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டு இருப்பதால், தமிழகத்தின் அரசு போக்குவரத்து சேவை என்பது நள்ளிரவு முதல் பாதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து கழகம் சார்பில் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்தபோதிலும், அவர்கள் அதனை கண்டுகொள்ளவில்லை. பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
போக்குவரத்து சேவைகள் பாதிப்பு: இன்று அறிவிக்கப்பட்டபடி தமிழ்நாட்டில் போக்குவரத்து கழகங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், பல இடங்களில் குறைவான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஒருசில இடங்களில் காவல்துறையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டு பேருந்துகள் இயக்கப்படுகிறது. காலையில் வேலைக்கு செல்லும் மக்கள் தனியார் பேருந்துகளை நம்பி, நெரிசல் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். Pakistan Internet Disruption: பாகிஸ்தானில் ஒட்டுமொத்தமாக இணையசேவை பாதிப்பு; காரணம் தெரியாமல் விழிபிதுங்கும் மக்கள்.!
குறைந்தளவு பேருந்துகள் இயக்கம்: மாவட்ட வாரியாக திருச்சியில் குறைந்தளவு பேருந்துகள் இயக்கப்படுகிறது, கடலூர் பணிமனையில் பேருந்துகளை இயக்க முற்பட்டதால், வேலைநிறுத்தத்தை அறிவித்த தொழிற்சங்கத்தினர் வாக்குவாதம் செய்தனர். மதுரையில் மிகக்குறைந்த அளவு போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. சேலத்திலும் அதே நிலைமை ஏற்பட்டுள்ளது. மயிலாடுதுறையில் காலையில் வழக்கமாக 137 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், 87 பேருந்துகள் தற்போது வரை இயக்கப்பட்டன.
பல்லவன் இல்லத்தில் அமைதி போராட்டம்: வடசென்னையின் பிரதான போக்குவரத்து சேவையை வழங்கும் பல்லவன் இல்லத்தில் இருந்து குறைந்தளவு பேருந்துகள் இயக்கப்பட்டன. பல்லவன் இல்லம் முன்பு தொழிலாளர்கள் தங்களின் அமைதி போராட்டத்தையும் தொடங்கி இருக்கின்றனர். பல இடங்களில் தற்காலிக ஓட்டுனர்கள் வாயிலாக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
பேருந்துகள் வழக்கம்போல் இயங்குவதாக அமைச்சர் தகவல்: போக்குவரத்து சங்கங்களின் வேலைநிறுத்தம் குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் கூறுகையில், "தமிழ்நாட்டில் போக்குவரத்து இயல்பாக இயங்கி வருகிறது. பணியாளர்கள் தங்களின் பணிகளை வழக்கம்போல மேற்கொள்கிறார்கள். கிராமங்கள் முதல் நகரங்கள் வரை பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அவர்கள் கூறிய 6 அம்ச கோர்கிகையில் 2 ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. Hardik Pandya Workout: “ஒரே திசையில் செல்வோம்” – ஐபிஎல் 2024 க்காக தீவிரமாக தயாராகும் ஹர்திக்.. கடுமையாகும் உடற்பயிற்சி.!
தற்காலிக ஓட்டுநர்களுடன் பேருந்துகள் இயக்கம்: தேவைப்படும் இடங்களில் இராணுவ பயிற்சி பெற்ற ஓட்டுனர்களை அழைத்தும் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. அரசின் அறிவிப்புப்படி சென்னை கோட்டத்தில் 100% பேருந்து சேவையும், விழுப்புரத்தில் 76% பேருந்து சேவையும், கோவையில் 95% பேருந்து சேவையும், சேலத்தில் 82% பேருந்து சேவையும், மதுரையில் 97% பேருந்து சேவையும், நெல்லை 100% பேருந்து சேவையும் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆம்னி பேருந்துகள் சங்கம் அறிவிப்பு: தொலைதூர பேருந்து பயணங்கள் பெரும்பாலும் இரவில் மேற்கொள்ளப்படும் நிலையில், அரசு அனுமதி வழங்கினால் பகலிலும் பேருந்து சேவையை மேற்கொள்ள தாங்கள் தயாராக இருப்பதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் வாயிலாக அரசு பேருந்துகள் இயக்கப்படாமல் பயணிகள் அவதிப்படும் நிலையில், அவர்களின் பயணத்தை கருத்தில் கொண்டு தனியார் பேருந்து உரிமையாளர்கள் தங்களின் பேருந்துகளை இயக்க அரசிடம் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
காவல் துறையினர் குவிப்பு: பேருந்துகள் பல மாவட்டங்களில் சூழ்நிலைக்கேற்ப இயக்கப்பட்டாலும், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கத்தினர் பேருந்துகளை இயக்கவிடாமல் பணிமனையிலும், பேருந்து நிலையத்திலும் வேலைக்கு வந்துள்ள ஓட்டுநர்களுடன் வாக்குவாதம் செய்வதால் காவல் துறையினரின் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பதற்றத்திற்குரிய வகையில் உள்ள பேருந்து நிலையங்கள், பணிமனைகள் முன்பு காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.