Viral Video: நடுரோட்டில் எல்லையை மீறிய காதல் ஜோடி; இருசக்கர வாகனத்தில் ஆபத்து பயணம்.! வீடியோ வைரல்.!

சாலை விதிகளை மீறுவது இந்தியாவில் வெகு சாதாரண விசயங்களில் ஒன்றாக இருக்கிறது. காதலின் பார்வையில் இவை தொடருவது இன்னும் சர்ச்சைகளை ஏற்படுத்துகிறது.

Delhi Couple Ride (Photo Credit: Twitter)

ஜூலை 17, டெல்லி (Trending Video): சமீபகாலமாகவே காதல் ஜோடிகளின் செயல்பாடுகள் பொதுஇடங்களில் எல்லையை மீறும் வண்ணமும், சாலைகளில் விதிமுறைகளை மீறும் வண்ணமும் இடம்பெறுகின்றன.

அவர்களின் சுய மகிழ்ச்சி மற்றும் மனநிலையை சரிப்படுத்த, அவர்களுக்குள் ஏற்படும் பிரச்சனையை சரி செய்ய பொதுஇடங்களை தேர்வு செய்து சர்ச்சையான செயல்களை செய்து வருகின்றனர்.

இருசக்கர வாகனங்களில் முன்பு இளைஞர்கள் கூட்டம் வேடிக்கை காண்பித்து அட்டூழியம் செய்து வந்த நிகழ்வுகள் காலப்போக்கில் இயல்பாகி, சில இடங்களில் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டு அவரை குறைக்கப்பட்டன. Twitter Down: மீண்டும் தொழில்நுட்ப கோளாறை எதிர்கொண்ட ட்விட்டர்; பயனர்கள் அவதி.!

இந்த நிலையில், டெல்லியில் உள்ள மங்கோல்புரி புறவழிசாலையில், கடந்த ஜூன் 16ம் தேதி (நேற்று) காதல் ஜோடி இருசக்கர வாகனத்தில் ஆபத்தான பயணம் மேற்கொண்டது.

இந்த நிகழ்வை இவர்களுக்கு பின்னால் தனது காரில் சென்ற நபர் வீடியோ எடுத்து ட்விட்டர் பக்கத்தின் மூலமாக டெல்லி காவல் துறையினரின் பார்வைக்கு கொண்டு சென்றுள்ளார். அவர்கள் நிகழ்வு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement