நவம்பர் 01, நொய்டா (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள நொய்டா, செக்டர் 40, ஜனதா பிளாட்ஸ் குடியிருப்பில் 57 வயதுடைய நபர், அவரின் வீட்டில் சடலமாக கிடைப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், சடலமாக கிடந்தவரின் கழுத்து பகுதியில் வெட்டு காயங்கள் இருப்பதையும், கொலை செய்யப்பட்டவாறு அடையாளம் தென்பட்டதையும் உறுதிப்படுத்தினார்.
அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த அதிகாரிகள், இதுகுறித்த விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் சாசி சர்மா (வயது 57), கட்டிட ஒப்பந்தத்தார் என்பது தெரிய வந்தது. தொடர் விசாரணையை தொடர்ந்து, பாரத் சவுகான், அவரின் மனைவி சீமாதேவி மற்றும் ராஜா திவாரி ஆகிய நபர்களை கைது செய்தனர்.
இவர்களிடம் மேற்கொண்ட தீவிர விசாரணையில், கள்ளக்காதல் காரணமாக கொலை நடந்தது அம்பலமானது. பாரத் சவுகான் மற்றும் அவரின் மனைவி சீமாதேவி, கட்டிட ஒப்பந்ததாரர் சாசி சர்மா ஆகியோர் கடந்த 2021 ஆம் ஆண்டு ஒரே பகுதியில் வசித்து வந்துள்ளனர்.
அப்போது, சாசிக்கும் - சீமா தேவிக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது பின்னாளில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்த நிலையில், சம்பவத்தன்று இருவரும் உல்லாசமாக இருப்பதை பாரத் சவுகான் நேரில் பார்த்துள்ளார். Kanpur Paneer Making: பன்னீர் விரும்பிகளுக்கு ஷாக் கொடுத்த தயாரிப்பாளர்; இப்படியா செய்வீங்க?..!
இதனையடுத்து, தனது மனைவியை அழைத்துக்கொண்டு வேறொரு இடத்திற்கு குடிபெயர்ந்துள்ளார். பின்னர் பாரத் டீக்கடை ஒன்றை ஆரம்பித்த நிலையில், அங்கு ராஜா திவாரி என்பவர் தினமும் வழக்கமாக டீ குடிக்க வந்து, பின் சவுகானுடன் பழக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.
அவர் அங்குள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் கல்லூரி மாணவர் ஆவார். இதனிடையே, பாரத் சவுகான் ஷாஷி சர்மாவுக்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கை எடுக்க முடிவெடுத்த நிலையில், இதற்கு சீமா தேவி மற்றும் திவாரி ஆகியோரும் உடந்தையாக இருந்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை சாஷி ஷர்மாவின் வீட்டிற்கு சென்ற நிலையில், அங்கு மூவரும் சர்மாவுடன் வாக்குவாதம் செய்துள்ளனர். அப்போது, ஷர்மா சீமா தேவியை தாக்கி இருக்கிறார். இதனைத்தொடர்ந்து ஏற்பட்ட ஆத்திரத்தில், மூவரும் சேர்ந்து சாசி சர்மாவின் கழுத்தை அறுத்து கொலை செய்து அங்கிருந்து தப்பி வந்துள்ளனர் என்பது அம்பலமானது.
தற்போது கைது நடவடிக்கைக்கு பின்னர், மூவரும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.