MSD Celebrates Diwali: குடும்பத்துடன் தீபாவளியை கொண்டாடிய மகேந்திர சிங் தோனி; அசத்தல் கிளிக்ஸ் இதோ.!
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தல தோனி, தனது குடும்பத்துடன் தீபாவளியை கொண்டாடினார்.
நவம்பர் 13, ராஞ்சி (Social Viral): உலகம் முழுவதும் இந்து மத மக்களால் தீபாவளி பண்டிகையானது வெகுவிமர்சையாக சிறப்பிக்கப்படுகிறது. இன்று மற்றும் நாளை வடமாநிலங்களில் அயோத்திக்கு ஸ்ரீ ராமர் தனது மனைவி சீதாதேவி மற்றும் சகோதரர் இலக்குவன் ஆகியோருடன் வனவாசம் முடிந்து அயோத்தி திரும்பிய நாள் தீபாவளியாக (Diwali 2023) சிறப்பிக்கப்படுகிறது.
தீபாவளி பண்டிகையை தொடர்ந்து, உலகெங்கும் பெருவாரியாக வாழ்ந்து வரும் இந்து மக்களுக்கு, அந்நாட்டு தலைவர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அமெரிக்காவில் இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்து வாழ்ந்து வந்து இந்துக்களின் எண்ணிக்கை அதிகம். ஆகையால், அங்குள்ள சில மாகாணங்களில் அரசு விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. Dua Lipa Sing Song On ICC CWC Final 2023: உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஹாலிவுட் பாடகி: கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி..!
இந்நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன், ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் (Mahendra Singh Dhoni) தோனி, தனது மனைவி சாக்ஷி (Sakshi Dhoni Singh) மற்றும் குடும்பத்தினருடன் தீபாவளி பண்டிகையாகை சிறப்பாக கொண்டாடினார். இதுகுறித்த அசத்தல் புகைப்படங்கள், சாட்சியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
View this post on Instagram
(The above story first appeared on LatestLY on Nov 13, 2023 09:40 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

