நவம்பர் 13, புதுடெல்லி (Cricket News): 13வது ஐசிசி உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடர், இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நவம்பர் 15 மற்றும் 16ம் தேதிகளில் 4 அணிகளுக்கு இடையேயான அரையிறுதி ஆட்டங்கள் நடைபெறுகிறது. வெற்றிபெறும் 2 அணிகள் இறுதிப்போட்டிக்கு தேர்வாகும்.
நவம்பர் 19ம் தேதி குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத், நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து, ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2023 இறுதிப்போட்டி நடைபெற தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேசிய அளவிலான பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. Hawaii Pond turned Pink: ஹலோ பாக்டீரியா அதிகரிப்பால், பிங்க் நிறத்தில் மாறிய குளம்: அதிசியம்போல பார்க்க குவியும் மக்கள்..!
கடந்த அக்.05ம் தேதி கோலாகல கொண்டாட்டத்துடன் உலகக்கோப்பை 2023 தொடர் தொடங்கியது. முதல் ஆட்டத்தை இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் எதிர்கொண்டு தொடங்கிவைத்தன. இறுதியாக நேற்று இந்தியா - நெதர்லாந்து அணிகள் மோதிக்கொண்டு ஆட்டத்தை நிறைவு செய்தன. எஞ்சிய 3 நாட்கள் ஆட்டமும் விறுவிறுப்பை கூட்ட காத்திருக்கின்றன.
இந்நிலையில், இறுதி ஆட்டத்தில் ஹாலிவுட் பாடகி துவா லிபா (Dua Lipa) பாடலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. கிரிக்கெட் போட்டியை நேரில் காணுவதற்கு டிக்கெட் வாங்கி வைத்துள்ள கிரிக்கெட் ரசிகப்பெருமக்களுக்கு இது எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது. நேரலையிலும் போட்டியின் நிகழ்வை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி, ஹாட்ஸ்டார் செயலியிலும் காணலாம்.
star sports is actually crazy 😭😭 pic.twitter.com/fSjvlhgSB3
— zayn (@ZaynMahmood5) November 12, 2023