வானிலை: ஜனவரி 30, 31 தேதிகளில் கனமழை எச்சரிக்கை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.. இன்றைய, நாளைய வானிலை இதோ.!

வடகிழக்கு பருவக்காற்று தமிழ்நாடு நிலப்பரப்பில் இருந்து விலகத்தொடங்குவதால், தமிழ்நாட்டில் சில நாட்களுக்கு மழை லேசாக எட்டிப்பார்த்து, பின் படிப்படியாக மழை தனது சுழற்சியை நிறைவு செய்கிறது.

வானிலை: ஜனவரி 30, 31 தேதிகளில் கனமழை எச்சரிக்கை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.. இன்றைய, நாளைய வானிலை இதோ.!
Tomorrow weather (Photo Credit: LatestLY)

ஜனவரி 26, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் (Weather) கடந்த 24 மணிநேரத்தில் ஏற்பட்ட மாற்றத்தைப் பொறுத்தவரையில், தென்தமிழகத்தில்‌ ராமநாதபுரம்‌ மாவட்டத்தில்‌) ஓரிரு இடங்களில்‌ மிக லேசான மழை பெய்துள்ளது. வடதமிழகம்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ வறண்ட வானிலை நிலவியது. கடந்த 24 மணி நேரத்தில்‌ கன்னியாகுமரியில் 32.5 டிகிரி செல்சியஸ்‌ வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இன்றைய வானிலை (Today Weather):

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும்‌ எச்சரிக்கையில், வடகிழக்கு பருவமழை அடுத்த இரு தினங்களில்‌ தென்னிந்திய பகுதிகளிலிருந்து விலகுவதற்கான வாய்ப்புள்ளது. 26-01-2025 மற்றும்‌ 27-01-2025 ஆகிய தேதிகளில் தமிழகம்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ வறண்ட வானிலை நிலவக்கூடும்‌. காலை வேளையில்‌ பொதுவாக லேசான பனிமூட்டம்‌ காணப்படும்‌. 28-01-2025 அன்று தமிழகம்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ வறண்ட வானிலை நிலவக்கூடும்‌. College Student Suicide: காதலி பேசாததால் விபரீதம்? 19 வயது கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை.! 

நாளைய வானிலை (Tomorrow Weather):

29-01-2025 அன்று தென்தமிழகத்தில்‌ ஒரு சில இடங்களிலும்‌, வடதமிழகத்தில்‌ ஓரிரு இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. 30-01-2025 அன்று தென்தமிழகத்தில்‌ அநேக இடங்களிலும்‌, வடதமிழகத்தில்‌ ஒரு சில இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌ லேசானது முதல்‌ யிதமான மழை பெய்யக்கூடும்‌. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும்‌ ராமநாதபுரம்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 31-01-2025 அன்று தமிழகத்தில்‌ ஒரு சில இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌ லேசானது முதல்‌ யிதமான மழை பெய்யக்கூடும்‌. கோயம்புத்தூர்‌ மாவட்டத்தின்‌ மலைப்பகுதிகள்‌, நீலகிரி மற்றும்‌ ஈரோடு மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 01-02-2025 அன்று உள்தமிழகத்தில்‌ ஒரு சில இடங்களிலும்‌, கடலோர தமிழகத்தில்‌ ஓரிரு இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌ லேசானது முதல்‌ யிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னை வானிலை (Chennai Weather) மற்றும்‌ புறநகர்‌ பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு (Chennai Weather Forecast):

இன்று (26-01-2025) வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. காலை வேளையில்‌ பொதுவாக லேசான பனிமூட்டம்‌ காணப்படும்‌. அதிகபட்ச வெப்பநிலை 30-31 செல்சியஸை ஒட்டியும்‌, குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 செல்சியஸை ஓட்டியும்‌ இருக்கக்கூடும்‌. நாளை (27-01-2025) வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. காலை வேளையில்‌ பொதுவாக லேசான பனிமூட்டம்‌ காணப்படும்‌. அதிகபட்ச வெப்பநிலை 30-31 செல்சியஸை ஒட்டியும்‌, குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸை ஓட்டியும்‌ இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

26-01-2025 மற்றும்‌ 27-01-2025 ஆகிய தேதிகளில் தெற்கு அந்தமான்‌ கடல்‌ பகுதிகள்‌, தெற்கு வங்கக்கடலின்‌ தெற்கு பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

(The above story first appeared on LatestLY on Jan 26, 2025 01:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).