Hanging Suicide (Photo Credit: Pixabay)

ஜனவரி 26, சென்னை (Chennai News): திருவண்ணாமலை (Tiruvannamalai) மாவட்டத்தில் உள்ள தொண்டமனூர் கிராமத்தில் வசித்து வருபவர் சுதேசி (வயது 19). இவர் சென்னையில் உள்ள திருவெல்லிக்கேணி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு விக்டோரியா ஆண்கள் விடுதியில் தங்கியிருந்தவாறு, மாநில கல்லூரியில் பி.எஸ்சி துறையில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். நேற்று முன்தினம் தனது கல்லூரி வகுப்பு நேரம் முடிந்ததும், விடுதிக்கு வழக்கம்போல வந்துள்ளார். BJP Annamalai: டிராமா மாடல் அரசு திமுக: பாஜக அண்ணாமலை கடும் கண்டனம்.. காரணம் என்ன? 

மாணவர் தற்கொலை:

விடுதியில் அறையில் ஆட்கள் இல்லாத நிலையில், திடீரென அவர் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த சக நண்பர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த திருவல்லிக்கேணி காவல்துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து சுதேசியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காதல் பிரச்சனையில் விபரீதம்?

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், மாணவரின் தற்கொலை மரணம் தொடர்பாக விசாரணை நடத்தினர். விசாரணையில், சுதேசி தனது வசந்த ஊரில் வசித்து வரும் இளம்பெண் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவருக்கும் கருத்து வேறுபாடு சமீபத்தில் எழுந்து, சரிவர இருவரும் பேசிக்கொள்ளவில்லை. இதனால் விரக்தியில் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.