Dead Cockroach In Biryani: கரப்பான் பூச்சி பிரியாணி பரிமாறிய பிரபல உணவகம்.. இது என்ன புது ரெசிபியா..!
ஹைதராபாத்தில் பிரபல உணவகத்தில் பரிமாறப்பட்ட பிரியாணியில் குட்டி கரப்பான்பூச்சிகள் கொட்டிக் கிடந்தது வாடிக்கையாளர்களை ஷாக் ஆக வைத்துள்ளது.
ஜனவரி 10, ஹைதராபாத் (Hyderabad): இன்றைய நாட்களில் மக்கள் மத்தியில் உணவு பொருட்கள் ஆன்லைனில் வாங்கி சாப்பிடும் பழக்கம் பெருகிவிட்டது. குடும்பத்துடன் ஹோட்டலுக்கு சென்று சாப்பிடுபவர்களும், சாப்பாட்டு பிரியர்களும் ஹோட்டலுக்கு செல்வது குறைவாகிவிட்டது. இந்த நிலையில் ஹைதராபாத்தில் ஜூப்ளி ஹில்ஸில் உள்ள ஒரு உணவகத்தில் பரிமாறப்பட்ட பிரியாணியில் கரப்பான் பூச்சி இருந்துள்ளது. இந்த சம்பவம் பிரியாணி ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. TN Advocate General Resigns: அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ராஜினாமா.. காரணம் என்ன?.!
பொதுவாக சாலையோர கடைகளில் சுத்தம் இருக்காது என்று கூறப்படும் நிலையில் மிகப்பெரிய பிரபலமான ஹோட்டலில் இவ்வாறு பரிமாறப்பட்டுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரியாணியை வாங்கி வாடிக்கையாளர் கரப்பான் பூச்சியை வீடியோ எடுத்து அவரது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தான் தற்போது இணையதளம் முழுவதும் வைரலாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து அந்த உணவகத்தில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனைகள் நடத்தி வருகின்றனர்.
హైదరాబాద్ జూబ్లీహిల్స్లోని ఓ ప్రముఖ రెస్టారెంట్లో కస్టమర్కి బిర్యానీలో వచ్చిన చనిపోయిన బొద్దింక. pic.twitter.com/OTi3qDHT00
— Telugu Scribe (@TeluguScribe) January 10, 2024
(The above story first appeared on LatestLY on Jan 10, 2024 12:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

