ஜனவரி 10, சென்னை (Chennai): தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் அரசின் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டவர். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் அரசு வழக்கறிஞராக மற்றும் மாநில அரசு சார்பாக பல வழக்குகளில் வாதாடி உள்ளார். இவர் 1996 முதல் 2001 வரையில் தமிழக தலைமை குற்றவியல் வழக்கறிஞராகவும் செயல்பட்டுள்ளார்.  TN Bus Strike: 2வது நாளாக போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்... பணிக்கு வராதவர்களை கணக்கெடுப்பு..!

இவர் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும் ஆவார். இவர் தற்போது தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவரின் திடீர் ராஜினாமா முடிவு தமிழகத்தையே உலுக்கியுள்ளது. மேலும் இவருக்கு பதில் அடுத்த தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் பி எஸ் ராமன் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றனர்.