மே 28, காக்கிநாடா (Andhra Pradesh News): ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள காக்கிநாடா மாவட்டம், சஞ்சய் நகர் பகுதியில் பிரதான சாலையில் அமராவதி கோவில் உள்ளது. பகல் வேளைகளில் இக்கோவில் திறந்தே இருக்கும். காலை மற்றும் மாலை வேளைகளில் மட்டும் பக்தர்கள் வந்து செல்வார்கள் என்பதால், அச்சமயம் கோவில் நிர்வாகிகள் இருப்பார்கள். பகல் வேளைகளில் கோவில் விஷயமாக அவ்வப்போது நடையை திறந்து வைத்தவரே அவர்கள் வெளியே சென்று வருவது வழக்கம் ஆகும். இந்நிலையில், சம்பவத்தன்று கோவிலுக்கு வந்த நபர், அங்கு சாமி தரிசனம் செய்தார். பின் கோவிலில் வாசலில் அமர்ந்தபடி எதோ பேசிக்கொண்டு இருந்தார். Car Two Weeler Collision 3 Died: கார் - இருசக்கர வாகனம் மோதி பயங்கர விபத்து: மூவர் பலி., 2 பேர் படுகாயம்.!
உண்டியலை கோணிப்பையில் வைத்து துணிகர திருட்டு: திடீரென சுற்றி ஆட்கள் இருக்கிறார்களா? என நோட்டமிட்டவர், வெள்ளை நிறத்திலான கோணிப்பை ஒன்றை எடுத்து வந்து, கோவிலில் இருந்த உண்டியலை தூக்கிக்கொண்டு நடையைக்கட்டினார். பட்டப்பகலில் நடந்த இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து கோவில் நிர்வாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. புகாரின் பேரில் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், இளைஞரின் அதிர்ச்சி செயல் தெரியவந்துள்ளது. மேலும், சிசிடிவி கேமிரா ஆதாரத்துடன் மர்ம நபருக்கு அதிகாரிகள் வலைவீசி இருக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் உண்டாக்கி இருக்கிறது.'
An unidentified man broke into the Ammavari temple, after making sure that no one was there, stole the #Hundi (Collection box) by putting in a bag at Sanjay Nagar in #Kakinada and managed to escape.
The #TempleTheft incident was captured on #CCTV.#AndhraPradesh #TempleThief pic.twitter.com/W6dBCjpfbu
— Surya Reddy () May 27, 2024