Husband Kills Wife: கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த மனைவி கொலை; தூக்கில் தொங்கவிட்டு நாடகமாடும் குடும்பம்?.!

கைமுர் மாவட்டத்தில் கள்ளக்காதல் விசயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மனைவியை கணவர் அடித்து கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. தலைமறைவான கணவருக்கு அதிகாரிகள் வலைவீசியுள்ளனர்.

Husband Kills Wife: கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த மனைவி கொலை; தூக்கில் தொங்கவிட்டு நாடகமாடும் குடும்பம்?.!
Murder | Crime File Pic (Photo Credit: Pixabay)

மே 27, கைமுர் (Bihar News): பீகார் மாநிலத்தில் உள்ள கைமுர் மாவட்டம், சர்வேன் கிராமத்தில் வசித்து வரும் 28 வயதுடைய பெண்மணி காஜல் தேவி. சம்பவத்தன்று இவர் தனது கணவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது தந்தை ஓம் பிரகாஷ் பிண்டுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மகளின் வீட்டிற்கு வந்த தந்தை, காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

கள்ளக்காதல் (Husband Kills Wife in Kaimur) தகராறு: மேலும், தனது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை ஏற்ற காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தற்போது விசாரணை நடத்தி வந்துள்ளான். மாமனாரின் புகாரில், மருமகனுக்கு கள்ளக்காதல் தொடர்பு ஒன்று இருந்ததாகவும், இதனால் தம்பதிகளுக்கு இடையே பிரச்சனை நிலவி வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. Bar DJ Shot Dead: பார் வாசலில் சுட்டுக்கொல்லப்பட்ட டிஜெ; அமைதியாக நடந்து சென்ற கொலையாளி.. ராஞ்சியில் பயங்கரம்.! 

பெண்ணின் தந்தையை அதிர்ச்சி புகார்: இதனால் மருமகன் மற்றும் அவரின் குடும்பத்தினர் தனது மகளை அடித்துக் கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்ததாக நாடகமாடுவதாகவும் கூறி இருக்கிறார். கடந்த 2014 ஆம் ஆண்டு தம்பதிகளுக்கு திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், தற்போது காஜல் தேவியின் கொலை சம்பவம் நடந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக தேவியின் கணவர் சுனில் பிண்டுவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெறுகிறது.

சுனிலுக்கு வலைவீச்சு: மேலும், சுனிலின் குடும்பத்தினர் தேவியின் மரணத்தை தற்கொலை என கூறி வந்தாலும், அவரின் உடலில் தாக்கியதற்கான காயங்கள் இருப்பதால் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் முடிவு தெரியவந்துவிடும் எனினும், சுனில் தலைமறைவாக இருப்பதால் அவருக்கு வலை வீசப்பட்டுள்ளது.

(The above story first appeared on LatestLY on May 27, 2024 01:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).