ஜனவரி 13, கீழ்பாக்கம் (Chennai News): சென்னையில் உள்ள கீழ்பாக்கம் (Kilpauk Govt Hospital) அரசு மருத்துவமனை வளாகத்தில், சம்பவத்தன்று வாலிபர் ஒருவர் இரவில் தங்கி இருக்கிறார். இவர் மதுபோதையில் இருந்ததாக தெரியவருகிறது. அப்போது வாலிபர் திடீரென மருத்துவமனையில் மகளிர் நோயாளி பிரிவுக்குள் சென்றுள்ளார். அங்கு உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த 50 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். Viluppuram Accident: கார் நேருக்கு நேர் மோதி பயங்கரம்; 4 பேர் பரிதாப பலி., விழுப்புரத்தில் சோகம்.!
28 வயது இளைஞர் கைது:
இதனால் அதிர்ந்துபோன பெண்மணி கத்தி கூச்சலிடவே, சத்தம் கேட்டு திரண்ட நோயாளிகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள், இளைஞரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவரை அதிகாரிகள் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். விசாரணையில், அவர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் வசித்து வந்த சதீஷ் (வயது 28) என்பது தெரியவந்தது.
வேலை தேடி சென்னை வந்த நிலையில், அங்கு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.