Viluppuram Pondicherry Car Accident (Photo Credit: @ThanthiTV X)

ஜனவரி 13, மதகடிபட்டு (Viluppuram News): விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில், தலைமை காவலராக வேலை பார்த்து வருபவர் பிரபாகரன். இவர் தனது குடும்பத்தினர் ஐவருடன், விழுப்புரம் - புதுச்சேரி (Viluppuram Pondicherry Highway) தேசிய நெடுஞ்சாலையில், மதகடிபட்டு மேம்பாலம் பகுதியில் காரில் சென்றுகொண்டு இருந்தார். அப்போது, புதுச்சேரி - விழுப்புரம் நோக்கி 2 பேர் காரில் வந்துகொண்டு இருந்தனர். Salem News: வாரிசு வேலை வேண்டிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை; பேரூராட்சி கண்காணிப்பாளர் கைது.! 

4 பேர் மரணம்:

இவர்கள் இருவர் பயணம் செய்த கார், எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஓட்டுநர், பிரபாகரன் ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், மற்றொரு காரில் பயணம் செய்த இரண்டு பேரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விசயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். உயிரிழந்தோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.