Mumbai Train Accident (Photo Credit : @vani_mehrotra X)

ஜூன் 09, மும்பை (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலம் மும்பை புறநகர் பகுதிகளை இணைக்கும் பிரதான சேவையில் புறநகர் ரயில் சேவை அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு பல லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்யும் மும்பை புறநகர் ரயில் சேவை உலகளவில் கூட்ட நெரிசலுக்கு மிகப் பிரபலமானதாகும். அந்த வகையில் இன்று அலுவலக தொடக்க நாள் திங்கட்கிழமை பலரும் கூட்ட நெரிசலுடன் ரயிலில் பயணித்ததாக கூறப்படுகிறது. Delhi Shocker: சூட்கேசில் நிர்வாணமாக கிடந்த 9 வயது சிறுமி.. நேரில் பார்த்த தந்தை.. பதறவைக்கும் கொடூரம்.! 

ரயில் விபத்தில் 5 பேர் பரிதாப பலி :

அப்போது உரிய இடம் கிடைக்காமல் பலரும் தொங்கிக்கொண்டு பயணித்த நிலையில், 12 பேர் தவறி விழுந்துள்ளனர். இந்த சம்பவத்தில் கீழே விழுந்த ஐந்து பேர் படுகாயமடைந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விஷயம் தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த விபத்து எப்படி நடந்தது? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

ரயில் விபத்து தொடர்பான வீடியோ :