Boxer Killed: சென்னையில் பயங்கரம்.. 24 வயது இளம் பாக்ஸர் 9 பேர் கும்பலால் சரமாரியாக வெட்டிக்கொலை..!
தலைநகர் சென்னையில் குத்துசண்டை வீரர் முன்விரோதம் காரணமாக வீட்டின் அருகே வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜனவரி 30, ஐஸ் ஹவுஸ் (Chennai News): சென்னையில் உள்ள திருவெல்லிக்கேணி, ஐஸ்ஹவுஸ், கஜபதி தெருவில் வசித்து வருபவர் தனுஷ் (வயது 24). இவர், நேற்று நள்ளிரவு நேரத்தில், தனது நண்பருடன் வீட்டின் அருகே நின்று பேசிக்கொண்டு இருந்தார். அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 9 பேர் கொண்ட மர்ம கும்பல், அவரை சரமாரியாக வெட்டிசாய்த்தது. இந்த சம்பவத்தில் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்த தனுஷ் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். YouTuber Divya Kallachi: சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை.. யூடியூபர் திவ்யா கள்ளச்சி உட்பட 4 பேர் அதிரடி கைது..!
காவல்துறையினர் விசாரணை:
மேலும், நண்பரை கும்பல் கொலை செய்வதை கண்டு அதிர்ச்சியடைந்த தனுஷின் நண்பர் அருண் குமார் என்பவர், கொலையை தடுக்க முயன்றும் பலனில்லை. அவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. பின் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. தகவல் அறிந்த காவல்துறையினர், விரைந்து சென்று தனுஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை முன்னெடுத்தனர். 12-Year-Old Girl Dies: அரிசியை நீரில் ஊறவைத்து சாப்பிட்ட சிறுமி மூச்சுத்திணறி பலி? - தூத்துக்குடியில் சோகம்.!
9 பேர் கும்பல் கைது:
முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட தனுஷுக்கும், சிலருக்கும் இடையே இருந்த முன்விரோதம் காரணமாக கொலை நடந்தது தெரியவந்துள்ளது. கொலை சம்பவம் குறித்து தனிப்படை அமைத்த காவல்துறை மோகன், செந்தில், டேவிட், விஷால், மற்றொரு விஷால் என 9 பேரை கைது செய்தனர். இவர்களிடம் நடந்த விசாரணையில் மோகன் - தனுஷ் இடையே இருந்த முன்விரோதத்தினால் கொலை அடைந்தது உறுதியானது.
(The above story first appeared on LatestLY on Jan 30, 2025 11:48 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

