Coimbatore Shocker: வழக்கறிஞர் 4 பேர் கும்பலால் சரமாரியாக வெட்டிக்கொலை; கோவையில் பயங்கரம்.!
காரில் பொள்ளாச்சி நோக்கி பயணம் செய்த வழக்கறிஞரை, 4 பேர் கும்பல் கொடூரமாக வெட்டிக்கொன்ற பயங்கரம் கோவையில் நடந்துள்ளது.
ஜூலை 03, செட்டிபாளையம் (Coimbatore News): கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சரவணம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் உதயகுமார் (வயது 48). இவர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று தனது காரில் பொள்ளாச்சி வரை சென்று இருக்கிறார். பொள்ளாச்சி மயிலேறிபாளையம் பகுதியில் நான்கு பேர் கும்பலானது, பயங்கர ஆயுதத்துடன் உதயகுமாரின் வாகனத்தை (Lawyer Killed in Coimbatore) இடைமறித்துள்ளது. வாகனத்தில் இருந்து வழக்கறிஞரை இறக்கிய கும்பல், அவரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்து தப்பிச்சென்றது. Savukku Shankar: அதிரடி காண்பிக்கும் காவல்துறை; சவுக்கு சங்கர் மீண்டும் கைது.. கோவை மத்திய சிறையில் அடைப்பு.!
6 தனிப்படை அமைத்து தொடரும் விசாரணை:
கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், உதயகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வழக்கறிஞரை கும்பல் காரில் இருந்து இறக்கி, அங்குள்ள கோழிப்பண்ணை அருகே கொலை செய்தது தெரியவந்தது. பின் அவர்கள் தப்பிச்சென்றுள்ளதும் உறுதியானதால், 6 தனிப்படை தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
(The above story first appeared on LatestLY on Aug 03, 2024 08:23 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

