Savukku Shankar (Photo Credit: @SavukkuOfficial X)

ஆகஸ்ட் 03, சென்னை (Chennai News): தமிழ்நாட்டில் நிலவும் அரசியல், அரசியல் கட்சிகளுக்கு இடையேயான முரண்பாடு, ஊழல் விவகாரங்கள் குறித்து பேசி, அரசியல்புள்ளிகளை சர்ச்சைக்குரிய வகையில் வம்பிழுத்து வழக்கு வாங்கி சிறையில் இருக்கும் யூடியூபர் சவுக்கு சங்கர் (Savukku Shankar). முன்னாள் தமிழ்நாடு அரசுப்பணியாளரான இவர், வழக்கு ஒன்றில் சிக்கிய பின்னர் அதனை இழந்தார். இதற்குப்பின் முழுநேர அரசியல் விவாதங்களில் கலந்துகொண்டு பிரபலமடைந்தார்.

யூடியூபில் சர்ச்சை கருத்து:

இதனிடையே, கடந்த ஆண்டு அரசியல் ரீதியான கருத்து மோதலில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். வெளியே வந்ததும் தனது யூடியூப் சேனலில் பல்வேறு புதிய விடீயோக்களை பதிவு செய்து வந்தவர், அவ்வப்போது சில தனியார் யூடியூப் சேனலின் விவாதங்களிலும் கலந்துகொண்டார். அப்படியாக ரெட்பிக்ஸ் எனப்படும் யூடியூப் சேனல் விவாதத்தில் கலந்துகொண்டபோது, தமிழ்நாடு காவலர்கள் குறித்தும், ஐபிஎஸ் அதிகாரி குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்தை முன்வைத்தார். Girl Files Case Against Father: மகளின் தோழியிடமே சில்மிசம்.. பல பெண்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிய தந்தை மீது பரபரப்பு புகார்.!

பழைய புகாரில் தற்போது கைது:

இதனால் கோவை சைபர் கிரைம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் சிறையில் அடைக்கப்பட்டார். பின் அடுத்தடுத்த வழக்குகள் அவரின் மீது பாய்ச்சப்பட்டு தற்போது சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, கடந்த ஆண்டு இரண்டு தரப்பினர் இடையே கலவரத்தை தூண்டும் விதமாக பேசியதாக கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, அதன் மீதான விசாரணை நடைபெற்று வந்தது.

மீண்டும் கோவை சிறையில் சவுக்கு:

இந்நிலையில், இந்த வழக்கின் கீழ் தற்போது சவுக்கு சங்கரை கோவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புழல் சிறையில் இருக்கும் சவுக்கு சங்கரை, புழல் சிறைக்கு சென்று கைதுகள் ஆவணங்களை சமர்ப்பித்த காவல்துறையினர், பலத்த பாதுகாப்புடன் நீதிபதிமுன் சமர்ப்பித்து கோவைக்கு அவரை அழைத்துசென்றுள்ளனர். தற்போது சவுக்கு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.