Car Rammed into Shop CCTV Video: கடைக்குள் புகுந்த கார்; பெண்ணை தேடி பரிதவித்த நபர்.. பதறவைக்கும் சம்பவத்தில் பரவசமடைந்த காதல்..!

கார் ஒன்று விபத்தை ஏற்படுத்திவிட்ட நிலையில், கடைக்குள் இருந்த துணையை நபர் ஒருவர் பதறியபடி தேடிய சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது.

Car Rammed into Shop CCTV Video: கடைக்குள் புகுந்த கார்; பெண்ணை தேடி பரிதவித்த நபர்.. பதறவைக்கும் சம்பவத்தில் பரவசமடைந்த காதல்..!
Delhi Car Enter Hotel (Photo Credit: @lavelybakshi X)

ஏப்ரல் 02, புதுடெல்லி (New Delhi): புது டெல்லியில் உள்ள சிவில் லைன்ஸ், ராஜ்பூர் சாலையில் தனியாருக்கு சொந்தமான சிற்றுண்டி உணவகம் செயல்பட்டு வருகிறது. நேற்று 12-க்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் உணவகத்தில் சாப்பிட்டு கொண்டு இருந்தனர். அச்சமயம் காரொன்று திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

பெண்ணை தேடிய நபர்: எனினும், கார் வந்த வேகத்தில் அங்கிருந்தவர்கள் மீது மோதி பரபரப்பை உண்டாக்கியது. சிறு காயங்கள் ஒருசிலருக்கு ஏற்பட்டது. அச்சமயம் நபர் ஒருவர் தன்னுடன் வந்தவரை கடைக்குள் விட்டுவிட்டு வாயில் வரை சென்றதாக தெரியவருகிறது. அப்பெண் நபரின் மனைவியாக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. கார் விபத்துக்குள்ளானதை கண்டு அதிர்ந்து போன அவர், பதற்றத்துடன் வந்து பெண்ணை தேடினார். Fan Hug Rohit Sharma: மைதானத்தில் புகுந்து ரோகித் சர்மாவை கட்டிப்பிடித்த இளைஞர்; மகிழ்ச்சியில் வெற்றிக்கொடி, அலேக்காக தூக்கிய பணியாளர்கள்.! 

விபத்தில் நடந்த நெகிழ்ச்சி செயல்: அவர் காருக்கு அடியில் சிக்கியுள்ளாரா? என்பதை இரண்டு, மூன்று முறை பதறியபடி கவனித்துள்ளார். சம்பந்தப்பட்ட பெண்மணி அவருக்கு பின்னால் இருந்து அழைக்க, ஒரு கணம் சுதாரித்த நபர், துணைக்கு ஒன்றும் ஆகவில்லை என்பதை உறுதி செய்து அமைதியாகினார். விபத்து நடந்தது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், சிசிடிவி கேமராவில் இந்த காட்சிகள் பதிவாகி இருக்கின்றன.

(The above story first appeared on LatestLY on Apr 02, 2024 09:22 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).