RR Vs MI Match IPL 2024 Fan Hug Rohit (Photo Credit: @CricCrazyJohns X)

ஏப்ரல் 02, மும்பை (Sports News): ஐபிஎல் 2024 தொடரின் (IPL 2024) 14வது ஆட்டம் நேற்று மகராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் (MI Vs RR) இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்க இயலாமல் தொடக்க ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, அணி ரண்களை குவிக்க இயலாமல் தடுமாறிப்போனது.

தடுமாறிய மும்பை அணி: அதிகபட்சமாக நேற்றைய ஆட்டத்தில் இஷான் கிஷன் 14 பந்துகளில் 16 ரன்னும், திலக் வர்மா 29 பந்துகளில் 32 ரன்னும், ஹர்திக் பாண்டியா 21 பந்துகளில் 34 ரன்னும் எடுத்திருந்தனர். எஞ்சிய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ராஜஸ்தான் அணியின் சார்பில் பந்து வீசியவர்களில் பால்ட் மற்றும் சாகல் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தனர். நன்றே புர்கர் இரண்டு விக்கெட்டை வீழ்த்தி இருந்தார். ஆட்டத்தின் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 125 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது. Kodaikanal Tragedy: உண்டான காயமெங்கும் தன்னாலே மாறிப்போன மாயமென்ன மொமெண்ட்.. கொடைக்கானலில் மீண்டும் மஞ்சும்மல் பாய்ஸ் சம்பவம்..! 

RR Vs MI IPL 2024 (Photo Credit: @IPL X)

அசத்தல் வெற்றிபெற்ற ராஜஸ்தான்: இதனையடுத்து, 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிதானமாக அடுத்து அடி தனது இலக்கை எட்டி வெற்றி அடைந்தது. அந்த அணியின் சார்பில் விளையாடிய ஜெய்ஸ்வால் 6 பந்துகளில் 10 ரன்னும், ஜோஸ் பட்லர் 16 பந்துகளில் 13 ரன்னும், ரியான் பிரயாங் 39 பந்துகளில் 56 ரன்னும் அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். 15.3 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது. இந்த ஆட்டத்தில் மும்பை அணியின் சார்பில் பந்து வீசியவர்களில் ஆகாஷ் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார்.

இன்று லக்னோ - பெங்களூர் அணிகளில் மோதல்: ஆட்டத்தின்போது, ரோகித் சர்மாவின் ரசிகர் ஒருவர் தடுப்புகளை மீறி மைதானத்தில் விரைந்து அவரை கட்டி அணைத்ததால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. பின் பாதுகாப்பு அதிகாரிகள் அனைவரும் வந்து அவரை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். பின் ஆட்டம் விறுவிறுப்புடன் நடைபெற்றது. ஏப்ரல் இரண்டாம் தேதி இன்று கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில், லக்னோ அணிக்கும் - பெங்களூர் அணிக்கும் (LSG Vs RCB) இடையேயான ஆட்டம் 07:30 மணி அளவில் நடைபெற உள்ளது. இந்த ஆட்டத்தை நேரலையில் ஜியோ சினிமா (Jio Cinema) செயலியில் இலவசமாக காணலாம்.

ரோஹித்தை கட்டிப்பிடித்த ரசிகர்:

அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியான்: