Meerut Short Circuit Accident (Photo Credit: @SachinGupta X)

மார்ச் 24, மீரட் (Uttar Pradesh News): உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட், வல்லவபுரம், ஜனதா காலனியில் வசித்து வருபவர் ஜானி, கூலித்தொழிலாளியாக (Meerut Fire 3 Children Died) வேலை பார்த்து வருகிறார். இவரின் சொந்த ஊர் முசாபர்நகர் ஆகும். தற்போது வேலைக்காக மேற்கூறிய முகவரியில் வசித்து வருகிறார். ஜானியின் மனைவி பாபிதா. தம்பதிகளுக்கு 4 குழந்தைகள் இருக்கின்றனர். தற்போது ஹோலி பண்டிகை கொண்டாட்டம் காரணமாக, குடும்பத்தினர் அனைவரும் வீட்டில் இருந்துள்ளனர். Young Indian Techie Died in US: 24 வயது பெண் தொழில்நுட்ப வல்லுநர் மரணம்; அமெரிக்காவில் இந்தியருக்கு விபத்தில் நடந்த சோகம்.! 

மின்னழுத்த பிரச்சனையால் வெடித்துசிதறிய செல்போன்: இந்நிலையில், நேற்று மாலை நேரத்தில் குடும்பத்தினர் வீட்டில் இருந்தபோது, செல்போனுக்கு சார்ஜ் ஏற்றிக்கொண்டு இருந்துள்ளனர். அச்சமயம், திடீரென மின்னழுத்த பிரச்சனை ஏற்பட்டு செல்போன் வெடித்து சிதறித்துள்ளது. இதனால் வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்து இருக்கிறது. வீட்டிற்குள் இருந்த குழந்தைகள் மற்றும் பெற்றோர் என 6 பேரும் தீயின் பிடியில் சிக்கி இருக்கின்றனர். இவர்களின் அலறல் சத்தம் மற்றும் கரும்புகையை கண்டு அதிர்ந்துபோன மக்கள், அவர்களை மீட்க முயற்சித்தனர். Moscow Terror Attack Video Out Now: 130 பேரின் உயிரை பறித்தது எப்படி?.. ரஷ்ய தாக்குதல் சம்பவத்தின் அதிர்ச்சி வீடியோ காட்சிகள் வெளியானது.. பதைபதைப்பு காணொளி உள்ளே.! 

குழந்தைகள் மூவரும் சடலமாக மீட்பு: ஆனால், எவ்வித பலனும் இல்லை. 4 குழந்தைகளில் மூவர் தீயின் பிடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், எஞ்சிய தாய் - தந்தை மற்றும் ஒரு குழந்தை என மூவர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வந்து குழந்தைகளின் உடலை சடலமாக மீட்டனர். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் செல்போனுக்கு சார்ஜ் ஏற்றியபோது, மின்னழுத்த பிரச்சனை காரணமாக அது வெடித்துசிதறி தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

குறிப்பு: கோடைகாலங்களில் மின்னணு சாதனங்களில் எளிதில் சூடாகிவிடும். ஆதலால், வெயில் நேரங்களில் அதனை சார்ஜ் செற்றவேண்டாம். அதேபோல, சூரிய ஒளி நேரடியாக படும் இடத்தில் செல்போனை வைத்துவிட்டு, அலட்சியமாக அதனை எடுத்து சார்ஜரில் இணைக்க வேண்டாம். இவ்வாறானவை சில நேரம் அதிக வெப்பத்தை செல்போனில் உண்டாக்கி, அது வெடித்து சிதறுவதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தும்.