Python on Truck: ஓட்டுநர் கேபினில் தலைகீழாக திடீரென நுழைந்த மலைப்பாம்பு; வாகனத்தை நடுவழியில் நிறுத்தி கதறிய ஓட்டுநர்.!
சாலையில் வாகனத்தை இயக்கி வந்த ஓட்டுநர் மற்றும் கிளீனரை, "குறுக்கே இந்த கௌசிக் வந்தால்" என்ற பாணியில் பதறவைத்த சம்பவம் குறித்த நிகழ்வை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
செப்டம்பர் 29, நொய்டா (Greater Noida News): டெல்லியின் புறநகர் பகுதிகளாக கருதப்படும் கிரேட்டர் நொய்டா, பாரி சௌக் பகுதியில் நேற்று கனரக வாகனம் ஒன்று பயணித்துக்கொண்டு இருந்தது.
வாகனத்தில் ஓட்டுநர் - கிளீனர் என இரண்டு பேர் இருந்தனர். இவர்கள் சாலையில் வாகனத்தை இயக்கிக்கொண்டு இருந்தபோது, திடீரென வாகனத்தின் மேல்புறத்தில் இருந்து மலைப்பாம்பு ஒன்று ஓட்டுநர் அறைக்குள் புகுந்துள்ளது. Pineapple Momos: மோமோஸ் பிரியர்களுக்கு உற்சாக செய்தி: புது ரகமாக அறிமுகமான அன்னாசிப்பழ மோமோஸ்.!
இதனைக்கண்டு பதறிப்போன இருவரும் வாகனத்தை உடனடியாக சாலையோரம் நிறுத்தினர். இருவரும் செய்வதறியாது திகைத்த நிலையில், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் விபரத்தை கேட்டறிந்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
பின் நீண்ட நேர போராட்டத்திற்கு பின் மலைப்பாம்பு வாகனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது. அதன்பின்னர் ஓட்டுநர் & கிளீனர் தங்களின் வாகனத்தை இயக்கி பயணத்தை தொடங்கினர்.
ग्रेटर नोएडा में परी चौक पर ट्रक में घुसा अजगर, चालक-परिचालक ट्रक छोड़कर भागे। पुलिस टीम ने कड़ी मशक्कत के बाद अजगर को किया रेस्क्यू#ViralVideo #GreaterNoida #Python pic.twitter.com/lMroyfNLrL
— AajTak (@aajtak) September 29, 2023
(The above story first appeared on LatestLY on Sep 29, 2023 12:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

