நிர்வாண படத்தை காட்டி மிரட்டல்.. 15 வயது சிறுமி பலாத்காரம்.. ஜிம் பயிற்சியாளர் அதிர்ச்சி செயல்.!
ஜிம் பயிற்சியாளர் ஒருவர் 15 வயதுடைய சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.
மே 08, அகமதாபாத் (Gujarat News): குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் பகுதியைச் சேர்ந்த ஜிம் பயிற்சியாளர் ஒருவர், 15 வயதுடைய சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்ஸோவில் கியது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் செல்போனில் நிர்வாண படங்கள் & வீடியோக்கள் இருப்பது கண்டறியப்பட்ட பின்னர் பெற்றோர் பதறிப்போன நிலையில், விசாரித்தபோது ஜிம் பயிற்சியாளரின் அதிர்ச்சி செயல் அம்பலமானது. மேலும், சிறுமியின் நிர்வாண படங்கள் 'ஆங்கிரி பேர்ட்' பெயரில் பதிவு செய்யப்பட்டு இருந்துள்ளது. Operation Sindoor: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பதில் சொன்ன பெண் அதிகாரிகள்.. பேராயுதத்தை கையில் எடுத்த இந்தியா..!
இன்ஸ்டாகிராமில் பழகி பரிசு கொடுத்து கொடுமை:
பெண்ணுக்கு அதே பகுதியைச் சேர்ந்த இம்ரான் என்பவர் செல்போனை பரிசாக கொடுத்து கொடூரத்தை அரங்கேற்றியது தெரியவந்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னதாக இன்ஸ்டாகிராம் நட்பில் இருந்த இருவரும் ஜிம்மில் நேரில் சந்தித்துள்ளனர். அப்போது, பெண்ணை நிர்வாணப்படுத்தி போட்டோ, வீடியோ எடுத்த நபர், அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவேன் என மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த விஷயம் குறித்து தற்போது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து இம்ரானை கைது செய்தனர்.
(The above story first appeared on LatestLY on May 08, 2025 07:44 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

