மே 07, டெல்லி (Delhi News): ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாத தாக்குதலில் (Pahalgam Terror Attack) 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனைத்தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வந்தது. இதனால் இரு நாடுகளிடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், மே 7ஆம் தேதியான இன்று அதிகாலை 1 மணிக்கு மேல் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற ராணுவ நடவடிக்கையை தொடங்கியது. பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத இடங்கள் குறிவைத்து தாக்கப்பட்டன. லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது உட்பட 9 பயங்கரவாத அமைப்புகளின் இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டதால் 100 பயங்கரவாதிகள் வரை கொல்லப்பட்டுளளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Operation Sindoor: கணவரை இழந்த பெண்களுக்கு பதில் சொல்லும் 'ஆபரேஷன் சிந்தூர்'.. தாக்குதலை தொடங்கிய இந்தியா.!
வெளியுறவுத்துறை செயலாளர் விளக்கம்:
ஆபரேஷன் சிந்தூர் குறித்த செய்தியாளர் கூட்டத்தில் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி (Foreign Secretary Vikram Misri) உரையாற்றினார். இந்த விளக்கக் கூட்டத்திற்கு கர்னல் சோபியா குர்ஷி மற்றும் வியோமிகா சிங் ஆகிய இரண்டு பெண் அதிகாரிகள் தலைமை வகித்தனர். வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறுகையில், பஹல்காம் தாக்குதலுக்கு ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இக்குழு லஷ்கர்-இ தொய்பாவுடன் தொடர்புடையது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் பாகிஸ்தானுக்கும் பயங்கரவாதிகளுக்கும் உள்ள தொடர்புகளை அம்பலப்படுத்தியுள்ளது.
பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தான்:
ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சியைக் கண்டு, சமூக நிலைமையை சீர்குலைக்கும் நோக்கில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் கூறினார். மேலும், பாகிஸ்தான் நீண்ட காலமாக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆதரித்து வருகிறது என்றார். பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். 2008ஆம் ஆண்டு மும்பை தாக்குதலுக்குப் பிறகு பொதுமக்கள் உயிரிழப்புகளில் இதுவே அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் என்று அவர் விவரித்தார்.
ஆபரேஷன் சிந்தூர் குறித்து வெளியுறவுத்துறை செயலாளர் விளக்கம்:
#WATCH | Delhi | #OperationSindoor| Foreign Secretary Vikram Misri says, "...The attack in Pahalgam was marked with extreme barbarity, with the victims mostly killed with head shots at close range and in front of their family...the family members were deliberately traumatised… pic.twitter.com/UYTYo0D45d
— ANI (@ANI) May 7, 2025