Karnataka Birde Calls Wedding Off (Photo Credit: @gharkekalesh X)

மே 24, ஹாசன் (Karnataka News): கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசன் மாவட்டம், ஏஜி சாலையில் உள்ள அடிச்சுஞ்சன்க்ரி திருமண மண்டபத்தில் தம்பதி ஒருவருக்கு திருமணம் நடைபெற்றவிருந்தது. அங்குள்ள ப்ஹுவனஹள்ளி பகுதியில் வசித்து வரும் பல்லவி, ஈஸ்வரஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த வேணுகோபால் என்பவருக்கும் இடையே திருமணம் நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. கடந்த 3 மாதத்துக்கு முன்னதாகவே திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்தது. அதனைத்தொடர்ந்து, வெள்ளிக்கிழமை திருமணம் நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. Chennai News: குளிர்பானத்தில் கிடந்த கண்ணாடி துண்டு; சிறுமிக்கு நேர்ந்த ஷாக் சம்பவம்.. பெற்றோர்களே உஷார்.! 

ட்விஸ்ட் வைத்த மணமகள்:

திருமணத்துக்காக புரோகிதர் மந்திரங்கள் ஓதியபோது, மணமகன் கையில் தாலி இருந்தது. அதனை கட்டுவதற்கு மணமகன் முற்பட்டபோது மணமகள் கண்கலங்கியபடி நின்றார். அவரிடம் மணமகன் என்ன என விசாரித்தபோது, தான் ஒருவரை காதலிப்பதாகவும், அவரையே கரம்பிடிக்க விரும்புவதாகவும் கூறினார். மேலும், அவர் தன்னை அழைத்துச்செல்ல வந்துகொண்டு இருப்பதாகவும் தெரிவித்தார். இதனால் மணமகன் அப்படியே நின்றார். மணப்பெண் உறவினர்கள் சமாதானம் செய்ய முயற்சித்தும் பலன் இல்லை. இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மணப்பெண் தனது காதலருடன் சென்றதாகவும் கூறப்படுகிறது.

திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்த மணப்பெண் வீடியோ: