Chennai Boba Tea Issue (Photo Credit : LinkedIn)

மே 23, துரைப்பாக்கம் (Chennai News Today): சென்னையில் உள்ள துரைப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பெண்மணி ஜான்வி சங்கவி. இவருக்கு பதின்ம வயதுடைய மகள் ஒருவர் இருக்கிறார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி மகள் ஆசையாக கேட்டார் என குடிப்பதற்கு குளிர்ந்த தேநீர் பானமான போபா டீ (Boba Tea) ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். அதனை சிறுமியும் ஆசையாக திறந்து குடித்த போது ஐஸ்கட்டி போன்ற ஒன்றை வாயில் மென்று உள்ளார். ஒரு கணம் சுதாரித்த சிறுமி, அது கண்ணாடி துண்டு என்பதை உணர்ந்து வெளியே துப்பி இருக்கிறார்.

சமூக வலைத்தளத்தில் பதிவு :

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த தாய், தனது மகளை அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்துள்ளார். மேலும் தான் வாங்கி வந்த போபா டீ விற்பனை செய்த நிறுவனத்திலும் சென்று இதுகுறித்து முறையிட்டுள்ளார். ஆனால் தற்போது வரை சம்பந்தப்பட்ட நிறுவனம் சார்பில் எந்தவிதமான பதிலும் அளிக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த பெண்மணி லிங்கெடின் (LinkedIn) பக்கத்தில் தனக்கு நேர்ந்த விஷயம் குறித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். Gold Silver Price: கணிசமாக குறையும் தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் என்ன..? விவரம் இதோ.! 

போபா டீ வாங்கியது குறித்த பெண்மணியின் பதிவு :

அந்த பதிவில், " கடந்த ஏப்ரல் 27ம் தேதி நான் என் மகளுக்காக போபா டீ வாங்கியிருந்தேன். அந்த கண்ணாடி பாட்டிலானது முழுவதும் அடைக்கப்பட்டு இருந்தும், உள்ளே கண்ணாடி துண்டு இருந்தது. எனது மகளுக்கு அதிர்ஷ்டவசமாக எந்த விதமான பெரிய கஷ்டமும் இன்றி முடிந்து விட்டாலும், பிறருக்கு இது எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம்" என்று அவர் கூறியுள்ளார். மேலும் சிறுமி நல்வாய்ப்பாக குளிர்பானத்தை அப்படியே விழுங்காமல் வாயில் சிறிது நொடி வைத்திருந்ததால் கண்ணாடி துண்டு அவரின் வயிற்றுக்குள் செல்லாமல் இருந்துள்ளது.

ப்ரோசன் பாட்டில் நிறுவனத்துக்கு எதிராக புகாரளித்த பெண்மணி :

தற்போது இந்த விஷயம் பேசுபொருளாகி உள்ள நிலையில், ப்ரோசன் பாட்டில் (Frozen Bottle) என்ற நிறுவனத்துக்கு எதிராக அவர் இந்த விஷயம் குறித்து புகாரளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட நிறுவனமும் அவரது போன் மற்றும் ஈமெயில் அழைப்புகளை நிராகரித்து வருவதால், இந்த விஷயத்தை சமூக வலைத்தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

போபா டீ என்றால் என்ன?

போபா டீ (Bubble Tea Or Boba Tea) என்பது தைவானில் கடந்த 1980களில் தோற்றுவிக்கப்பட்ட பிரபலமான குளிர்ந்த தேநீர் பானமாகும். இது தேநீர், பால் மற்றும் சப்போக்கா முத்துக்கள் (tapioca pearls) சேர்க்கப்பட்டு உருவாகும் குளிர்ந்த மற்றும் இனிப்பு கொண்ட பானமாக பரிமாறப்படுகிறது. சமீபகாலமாகவே தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னை மற்றும் கோயம்புத்தூர் போன்ற நகரங்களில், போபா டீ கடைகள் அதிகரித்து வருகின்றன.