Karur College Student Kidnap Case Today (Photo Credit: @bjpkarurdt X)

மார்ச் 10, தான்தோன்றிமலை (Karur News): கரூர் மாவட்டத்தில் உள்ள தான்தோன்றிமலை (Thanthonimalai) பகுதியில் வசித்து வரும் கல்லூரி மாணவி, இன்று வழக்கம்போல தனது கல்லூரிக்கு வருகை தந்துள்ளார். இவர் கரூர், பொன் நகர் பகுதியில் தனது தோழிகளுடன் கல்லூரிக்கு நடந்து சென்றுகொண்டு இருந்தார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், கல்லூரி மாணவியை தனது வாகனத்தில் கடத்திச் சென்றார். இதனை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள், மாணவியை மீட்க முயற்சித்தும் பலன் இல்லை. Cigarette Kills: படுக்கையிலேயே மூச்சுத்திணறி உயிரிழந்த ஐடி ஊழியர்.. எமனான சிகிரெட் உயிர்பறித்த சோகம்..! 

கல்லூரி மாணவி கடத்தல்:

இதனையடுத்து, உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் விபரத்தை கேட்டறிந்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், கல்லூரி மாணவியை மீட்கும் முயற்சி நடந்து வருகிறது. தங்களின் மகள் கடத்தப்பட்ட செய்தி அறிந்த பெற்றோர், கண்ணீருடன் காணப்படுகின்றனர். முதற்கட்ட விசாரணையில், கல்லூரி மாணவியை, ஒருதலையாக காதலித்து வரும் நடத்தி கடத்தி சென்றதாக மாணவியின் தோழிகள் கூறியுள்ளனர்.