KK Nagar Cigarette Death | Victim Netaji (Photo Credit: Facebook)

மார்ச் 10, கே.கே நகர் (Chennai News): திருவண்ணாமலை (Tiruvannamalai) மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் நேதாஜி (வயது 34). இவர் ஐடி நிறுவனத்தில் (IT Employee) ஊழியராக வேலை பார்த்து வருகிறார். பணி நிமித்தமாக சென்னையில் (Chennai) உள்ள சாலிகிராமம், விஜயராகவபுரம், 7 வது குறுக்குத்தெரு பகுதியில் தற்போது வசித்து வருகிறார். நேதாஜி மதுபோதைக்கு அடிமையானவர் என கூறப்படுகிறது. இதனால் தினமும் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வருபவர், வீட்டிலேயே மதுபானம் அருந்துவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார். மேலும், சிகிரெட் பழக்கமும் உண்டு. இதனிடையே, நேற்று வழக்கம்போல, வீட்டுக்குள் அவர் மதுபானம் அருந்தி இருக்கிறார். உடைந்த நிலையில் வெளியே தொங்கிய கதவு.. ஆபத்தான முறையில் இயக்கப்பட்ட அரசுப்பேருந்து..! 

கரும்புகையால் மூச்சுத்திணறி சோகம்:

போதையில் சிகிரெட் பிடித்த நேதாஜி, அப்படியே உறங்கி இருக்கிறார். அவரின் கைகளில் இருந்த சிகிரெட் துண்டு, பஞ்சு மெத்தையில் பட்டு தீப்பிடித்து இருக்கிறது. இரவு நேரத்தில் நேதாஜியின் வீட்டில் இருந்து கரும்புகை கிளம்பியதை அக்கம் பக்கத்தினர் கவனித்துள்ளனர். இதனையடுத்து, உடனடியாக கே.கே நகர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், வீட்டின் கதவை உடைத்தனர். உள்ளே சென்று பார்த்தபோது நேதாஜி மயங்கி இருக்க, அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தபோது மரணம் உறுதி செய்யப்பட்டது. Vellore News: குலதெய்வ வழிபாட்டில் தேனீக்கள் வடிவில் காத்திருந்த எமன்; ஒருவர் பலி.! வேலூரில் சோகம்.! 

காவல்துறை விசாரணை:

அதாவது, நேதாஜி மூச்சுத்திணறி உயிரிழந்து இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதிகாரிகள் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், நேதாஜி புகைபிடித்து, போதையிலேயே உறங்கியதில் மெத்தையில் தீ கங்கு பட்டு புகை எழுந்தது உறுதி செய்யப்பட்டது. தற்போது நேதாஜியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அவரின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகை பழக்கம் உடல் நலனுக்கு எமன்! போதையின் பாதை அழிவைத் தரும்!