Karur Shocker: குடிகார மருமகனால் மாமனாருக்கு நேர்ந்த பயங்கரம்: கரூரில் துயரம்.. பரிதாப பலி.!

சண்டையில் கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு வந்த மனைவியை அழைத்துச் செல்ல மாமனாரின் வீட்டிற்கு வந்த மருமகன், இறுதியில் மாமனாரை குத்திக் கொன்ற பயங்கரம் குளித்தலையில் நடந்துள்ளது.

Murder (Photo Credit: Pixabay)

அக்டோபர் 13, குளித்தலை (Karur News): கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை (Kulithalai Father In Law Kills), கருங்கலாப்பள்ளி பகுதியில் வசித்து வருபவர் ராஜேந்திரன். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி இருக்கிறார். இதனிடையே, சம்பவத்தன்று நடந்த தகராறில், ராஜேந்திரனின் மனைவி தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். கணவரிடமும் பேசாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று ராஜேந்திரன் தனது மனைவியை வீட்டிற்கு அழைத்து வர மாமனாரின் வீட்டிற்கு சென்றுள்ளார். மதுபானம் அருந்திவிட்டு மனைவியை அழைத்து வரச் சென்றதாக தெரியவருகிறது. அப்போது, மாமனார் - மருமகன் இடையே வாக்குவாதம் உண்டாகியுள்ளது. Car Struck into Flood: மதுரையை அலறவிட்ட பேய் மழை; சுரங்கப்பாதையில் சிக்கிய கார்.. 3 பேரின் உயிரை காப்பாற்றிய போலீஸ்.. குவியும் பாராட்டுக்கள்.! 

ஆத்திரத்தில் மாமனாரை கொன்ற மருமகன்:

வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த மருமகன் ராஜேந்திரன், தனது மாமனார் ஞானகுருவை கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்தில் ஞானகுரு நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த குளித்தலை காவல் துறையினர், ஞானகுருவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மருமகன் ராஜேந்திரனை கைது செய்த அதிகாரிகள், நீதிமன்றத்தில் சமர்ப்பித்து சிறையில் அடைத்தனர். குடும்பத்தின் ஆதாரத்தூணாக இருந்த ஞானகுரு மறைந்ததால், அவரின் மனைவி, பிள்ளைகள் கண்ணீர் துயரத்திற்கு உள்ளாகியிருந்தது காண்போரை வருந்த வைத்தது.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement