Madurai Flood | Car Submerged in Subway (Photo Credit: @PTI_News X)

அக்டோபர் 13, மணி நகரம் (Madurai News): வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் கடந்த வாரம் முதலாகவே ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் திடீர் வெள்ளப்பெருக்கும் சாலைகளில் ஓடுகிறது. இதனிடையே, நேற்று மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடீர் கனமழை பெய்து இருந்தது. இதனால் இரவு நேரங்களில் நகரின் பல இடங்களில் சாலைகளில் மழைநீர் வெள்ளமாக ஓடியது.

உயிரை காப்பாற்றிக்கொண்ட காவலர்கள்:

இதனிடையே, மதுரையில் உள்ள மணிநகரம் பகுதியில் இரயில்வே சுரங்கப்பாதை இருக்கிறது. இந்த சுரங்கப்பாதையில் நீர் தேங்கியிருந்த நிலையில், அதனை கவனிக்காமல் என்ற காவல்துறையினரின் வாகனம் அங்கேயே சிக்கிக்கொண்டது. இதனால் காவலர்கள் காரில் இருந்து வெளியேறி வந்துகொண்டு இருந்தனர். Trichy Sharjah Flight: நடுவானில் பயணிகளுக்கு கிலி காண்பித்த விமான பயணம்; திருச்சியில் புறப்பட்ட விமானம் தப்பியது எப்படி?.. விபரம் உள்ளே.! 

3 பேர் நீருக்குள் சிக்கிக்கொண்டனர்:

அச்சமயம், அதே சுரங்கப்பாதை நோக்கி வேறொரு சொகுசு கார் வந்தது. அதில் 3 பேர் இருந்தனர். சுரங்கபாதையில் வெள்ள நீர் தேங்கியுள்ளதை கண்ட பொதுமக்கள், கார் ஓட்டுனரை அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், அவர்கள் அதனை கவனிக்காமல் காரை செலுத்தி இருக்கின்றனர். இதனால் கார் நீருக்குள் சிக்கிக்கொண்டது. காருக்குள் இருந்த மூவரும் பதறிப்போயினர்.

பத்திரமாக மீட்பு & நீர் வெளியேற்றம்:

இதனையடுத்து, ஏற்கனவே காரில் இருந்து இறங்கிய காவலர்கள், தங்களின் உயிரையும் பொருட்படுத்தாது விரைந்து நீந்தி சென்று காரில் சிக்கித்தவித்த 3 பேரையும் பத்திரமாக மீட்டனர். சுரங்கப்பாதையும் தற்காலிகமாக மூடப்பட்டது. அதனைத்தொடர்ந்து, இன்று காலை சுரங்கபாதையில் தேங்கியிருந்த நீரை மோட்டார் உதவியுடன் அதிகாரிகள் வெளியேற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். நல்வாய்ப்பாக இந்த சம்பவத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

நீருக்குள் காவலர்கள் சிக்கிக்கொண்டு, பின் பொதுமக்களை காப்பாற்றிய காணொளி: