Girl Suicide: 18 வயது இளம்பெண் பலாத்கார முயற்சி; பணியிடத்தில் நடந்த சோகம்.. தற்கொலை செய்து உயிரை மாய்த்த இளம்பெண்.!

வேலைக்கு வந்த இடத்தில் உரிமையாளரின் அதிர்ச்சி செயலால் மனமுடைந்துபோன இளம்பெண், சானிடைசர் குடித்து தற்கொலைக்கு முயன்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

Girl Suicide: 18 வயது இளம்பெண் பலாத்கார முயற்சி; பணியிடத்தில் நடந்த சோகம்.. தற்கொலை செய்து உயிரை மாய்த்த இளம்பெண்.!
Rape File Pic (Photo Credit: Pixabay)

ஜனவரி 31, ரங்காரெட்டி (Telangana News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ரங்காரெட்டி மாவட்டம், மீர்பேட் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பியூட்டி பார்லர் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பியூட்டி பார்லரில் உரிமையாளராக முரளி என்பவர் இருந்து வந்துள்ளார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னதாக இந்நிறுவனத்தில் 18 வயதுடைய இளம்பெண் வேலைக்கு சேர்க்கப்பட்டு பணியாற்றி வந்துள்ளார்.

பலாத்கார முயற்சி தோல்வி: நேற்று முன்தினம் மதியம் 03:00 மணி அளவில் கடையில் ஆட்கள் இல்லாத போது, பியூட்டி பார்லர் உரிமையாளர் முரளி கடையில் பணியாற்றி வந்த 18 வயது இளம் பெண்ணை கட்டாயப்படுத்தி பலாத்காரத்திற்கு உட்படுத்த முயற்சித்துள்ளார். அவரது பிடியில் இருந்து தப்பிய பெண்மணி, அங்கிருந்த சானிடைசரை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். Bigg Boss Contestant Raped: பெண் பிக் பாஸ் போட்டியாளரை பலாத்காரம் செய்த நண்பர்; காவல் நிலையத்தில் பரபரப்பு குற்றசாட்டு.! 

முதலுதவிக்கு பின் உடனடியாக வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட சிறுமி: இதனையடுத்து, கொலை வழக்கில் சிக்கி விடுவோம் என அஞ்சிய முரளி, உடனடியாக அவரை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளார். குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் மருத்துவமனைக்கு வந்துள்ளனர். அங்கு விஷயத்தை சொல்லாமல் அவர்களை சமாளித்து இருக்கிறார், மருத்துவமனையில் மருத்துவர்களும் முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

உடல்நலக்குறைவால் ஒரே நாளில் நடந்த சோகம்: இந்நிலையில், வீட்டிற்கு சென்ற சிறுமி திடீரென உடல் நலக்குறைவை மீண்டும் சந்தித்து உயிருக்கு போராடியுள்ளார். அவரை மீட்ட குடும்பத்தார் மருத்துவமனையில் அனுமதி செய்த போது, வரும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இறக்கும் தருவாயில் பெண்மணி கூறிய தகவலின் பெயரில், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்த பெற்றோர், பியூட்டி பார்லர் முன்பு திரண்டு உறவினர்களுடன் போராட்டமும் நடத்தினர். இது குறித்து காவல் த்ரைனர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Jan 31, 2024 12:12 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).