Ranipet College Girl Complaint Against Politician Case (Photo Credit: YouTube / Instagram)

மே 17, அரக்கோணம் (Thiruvallur News Today): இராணிபேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம், பருத்திபுத்தூர் பகுதியில் வசித்து வரும் 21 வயது கல்லூரி மாணவி பிஏ பட்டம் பயின்று வருகிறார். இவர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சிக்கு வருகை தந்த அரக்கோணம் தொகுதி எம்.எல்.ஏ ரவியை நேரில் சந்தித்து அதிர்ச்சி தரும் விஷயங்களை தெரிவித்து தன்னை காப்பாற்றுமாறு கூறினார். அதாவது, திமுக பிரமுகரின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க உறுதுணையாக இருக்குமாறு கூறியவர், தனக்கு நேர்ந்த கொடுமையை கண்ணீருடன் விவரித்தார்.

மோசடி திருமணம்:

அதாவது, அரக்கோணம் காவனூர் பகுதியில் வசித்து வரும் தெய்வச்செயல், திமுகவில் பொறுப்பாளராக இருந்து வருகிறார். ஏற்கனவே திருமணம் செய்த 40 வயது தெய்வச்செயல், திருமணத்தை மறைத்து காதலிப்பதாக கூறி ஜனவரி 31ல் சோளிங்கர் பகுதியில் திருமணம் செய்துகொண்டார். மார்ச் மாதம் வரையில் நல்லபடியாக சென்ற திருமண வாழ்க்கையில் திடீர் அதிர்ச்சியாக கணவர் பல திமுக பிரமுகர்களுடன் தான் தனிமையில் இருக்க வேண்டும் என கொடுமைபடுத்த தொடங்கினார். Heatwave Death in Tamilnadu: கோடை வெப்பத்தால் 3 பேர் உயிரிழப்பு; தமிழ்நாட்டில் சோக மரணம்.. மக்களே கவனமா இருங்க.! 

செக்ஸ் டார்ச்சர்:

இந்த விஷயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவியை தினமும் கடுமையாக தாக்கிய தெய்வச்செயல், உடலெல்லாம் வெறி கொண்ட நபர் போல கடித்து துன்புறுத்தி இருக்கிறார். கடந்த ஏப்ரல் 5ல் வாழ்வில் விரக்தி உண்டாகி மாணவி தற்கொலை செய்துகொண்ட பின்னர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்கொலைக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தாமல் தெய்வச்செயலின் அரசியல் பலத்தால் முதல் தகவல் அறிக்கை உட்பட அனைத்து விஷயத்தையும் தள்ளிப்போட்டுள்ளனர்.

மிரட்டல் விடுத்த பிரமுகர்:

மாணவியின் பின்புலத்தை தெரிந்துகொண்டு, பெற்றோரை கொலை செய்திடுவதாக மிரட்டி கொடுமை செய்த திமுக பிரமுகர், பெண்ணை முதலில் தன்வசப்படுத்த தன்னை வழக்கறிஞர் என அறிமுகபடுத்தி இருக்கிறார். நீ என்னைத்தான் காதலிக்க வேண்டும், என்னையே திருமணம் செய்ய வேண்டும் என ஒவ்வொரு விஷயத்தையும் மிரட்டி சாதித்து இருக்கிறார். இதற்கு தனது அரசியல் பதவியை கேடயமாக பயன்படுத்தி இருக்கிறார். இறுதியாக பெண் துயரங்களை தாண்டி முற்றுப்புள்ளி வைக்க அதிமுக எம்.எல்.ஏவிடம் நேரடியாக உதவிக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

திமுக பிரமுகர்களுடன் படுக்கையை பகிர வற்புறுத்தி தினமும் செக்ஸ் டார்ச்சர் கொடுக்கபட்டுள்ளது. காரை ஏற்றி கொலை செய்வேன், துண்டு துண்டாக வெட்டிவிடுவேன் என கொலை மிரட்டல் விடுகபட்டுள்ளது. தனக்கு காவல் துறையினர் உரிய முறையில் விசாரித்து நீதி கிடைக்க உதவிட வேண்டும் என கோரிக்கை முன்வைக்கபட்டுள்ளது.

மாணவி தனது குமுறலை வெளிப்படுத்தும் காணொளி:

வீடியோ நன்றி: பாலிமர் தொலைக்காட்சி

பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள்:

சைல்டுலைன் இந்தியா - 1098; பெண்கள் உதவி எண் - 181; தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் - 112; வன்முறைக்கு எதிரான தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் – 78271 70170; போலீஸ் பெண்கள் / மூத்த குடிமக்கள் உதவி எண் - 1091 / 1291; காணாமல் போன குழந்தை மற்றும் பெண்கள் குறித்து புகார் அளிக்க - 1094. ஆன்லைன் வழியாக பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க: https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?3