TNEB JE Arrested: பெண்ணை கட்டிப்பிடித்து சில்மிஷம்; மின்வாரிய இளநிலை பொறியாளர் கைது.! அலுவலகத்தில் அதிர்ச்சி செயல்.!
பெண் தனியாக அலுவலகத்தில் இருப்பதை சாதகமாக்கி, அவரிடம் சில்மிஷம் செய்த தமிழ்நாடு மின்வாரிய இளநிலை பொறியாளர் கண்ணன் கைது செய்யப்பட்டார்.
நவம்பர் 16, சாத்தான்குளம் (Thoothukudi News): தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் (Sathankulam), துணை மின் நிலைய அலுவலகத்தில், இளநிலை பொறியாளராக (TNEB JE Harassed Young Women) கண்ணன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் மதுரையை சேர்ந்தவர் ஆவார். தற்போது சாத்தான்குளம் பகுதியில் தங்கியிருந்து பணியாற்றுகிறார். இவரின் அலுவலகத்தில் இளம்பெண் ஒருவரும் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். Minor Girl Raped: 13 வயது சிறுமி கர்ப்பம்., 62 வயது பள்ளிப் பேருந்து உதவியாளர் அதிர்ச்சி செயல்.. பெற்றோர்களே கவனம்.!
தனிமையை பயன்படுத்தி சில்மிஷம்:
இதனிடையே, சம்பவத்தன்று அலுவலகத்தில் ஆட்கள் இல்லை என்று கூறப்படுகிறது. இளம்பெண் தனது பணிகளை கவனித்துக்கொண்டு இருந்தபோது, இளநிலை பொறியாளர் கண்ணன், அவரை தவறான எண்ணத்துடன் கட்டிப்பிடித்து சில்மிஷம் செய்து, அத்துமீற முயன்றதாக கூறப்படுகிறது.
காவல்நிலையத்தில் புகார்:
இதனால் பதறிப்போன பெண்மணி, அவரை தள்ளிவிட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார். பின் உடனடியாக சாத்தான்குளம் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல்துறையினர், கண்ணனை அதிரடியாக கைது செய்தனர். நீதிமன்ற நடவடிக்கைக்கு பின் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
(The above story first appeared on LatestLY on Nov 16, 2024 02:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

