ஜூலை 01, நாகர் கர்னூல் (Telangana News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நாகர் கர்னூல் மாவட்டம் (Nagar Kurnool Building Collapse), வணப்படலா கிராமத்தில் வசித்து வருபவர் கொடுகு பாஸ்கர். இவரின் மனைவி பத்மா. தம்பதிகளுக்கு வசந்தா (7), பாப்பி (6), விக்கி என்ற 15 மத கைக்குழந்தை என 3 குழந்தைகள் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் தங்களுக்கு சொந்தமான மண்வீட்டில் வசித்து வருகிறார்கள். பாஸ்கரின் குடும்பம் ஏழைக்குடும்பம் என்பதால், அவர்கள் மணவீட்டிலேயே வாழ்ந்து பழகிவிட்டனர். பல ஆண்டுகள் கடந்த மண்வீடு காரணமாக, அது வலுவிழந்து காணப்பட்டு இருக்கிறது. இதனிடையே, நேற்று அங்குள்ள சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்தது. இதனால் வலுவிழந்து காணப்பட்ட வீடு, எப்போதும் இடிந்து விழும் நிலைக்கு சென்றுள்ளது. Ola CEO Bhavish Aggarwal: திருமணமான பெண்களின் பணி விவகாரம்: பாக்ஸ்கான் நிறுவனம் குறித்து ஓலா கருத்து.!
குழந்தைகள் பலி., தாய் உயிர் ஊசல்:
இந்நிலையில், இன்று காலை வீட்டில் குடும்பத்தினர் அனைவரும் உறங்கிக்கொண்டு இருந்த நிலையில், திடீரென வீடு இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் வீட்டில் உறங்கிக்கொண்டு இருந்த குழந்தைகள் வசந்த, பாப்பி, விக்கி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், தாய் பத்மா படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், உயிரிழந்தோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழஸ்க்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
మట్టి ఇల్లు కూలి ఒకే ఇంట్లో నలుగురు మృతి
నాగర్ కర్నూలు - వనపట్ల గ్రామానికి చెందిన గొడుగు భాస్కర్ ఉంటున్న మట్టి ఇల్లు రాత్రి కురిసిన వర్షానికి కూలిపోయింది.
మట్టి మిద్దె మీద పడడంతో భాస్కర్ భార్య పద్మ, కూతుళ్లు వసంత(7), పప్పి(6), కొడుకు విక్కీ(15 నెలలు) నలుగురు అక్కడికక్కడే మృతి… pic.twitter.com/6KB2Xjzw9E
— Telugu Scribe (@TeluguScribe) July 1, 2024