ஜூலை 01, பெங்களூர் (Bangalore): சென்னையில் செயல்பட்டு வரும் பாக்ஸ்கான் ஐபோன் உற்பத்தி நிறுவனத்தில், திருமணம் முடிந்த பெண்களை வேலைக்கு அமர்த்த மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், இந்த விஷயம் குறித்து மாநில அரசு விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு, மத்திய வேலைவாய்ப்பு அமைச்சகம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இதுதொடர்பான வாதங்கள் மாநில அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி இருந்தன. Team India Return Updates: கோரப்புயலின் தாக்கத்தில் சிக்கிக்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி; இந்தியா வருவது எப்போது?.. தற்போதைய நிலை என்ன?..!
ஓலா தலைமை அதிகாரி பதில்:
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து மறைமுக கருத்து தெரிவித்துள்ள ஓலா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பவிஷ் அகர்வால், "பாக்ஸ்கான் நிறுவனத்தை போல எண்களின் நிறுவனத்தில் எந்த விதமான கொள்கைகளும் இல்லை. குறிப்பாக நாங்கள் தொடர்ச்சியாக அதிகளவிலான பெண்களை வேலைக்கு எடுத்து வருகிறோம். இவ்வாறான செயல்கள் பெண்களின் முன்னேற்றம் மற்றும் பொருளாதார சமநிலையை கேள்விக்குறியாக்கும். ஓலா எப்போதும் பாலின சமத்துவத்தின் உறுதியாக இருக்கிறது.
12,000 பெண்களுக்கு பணி கொடுக்க இலக்கு:
பெண்கள் எப்போதும் நல்ல குணங்களையும், ஒழுக்கமான நிலைகளையும், திறமைகளையும் கொண்டு இருப்பார்கள். இந்தியாவில் பெண்களை வேலைக்கு அமர்த்துதல் என்பது ஒவ்வொரு துறையிலும் இருக்க வேண்டும். எமது ஓலா நிறுவனத்தில் தலைமை அதிகாரிகள் முதல் கீழ்நிலை பணியாளர்கள் வரை பலரும் பெண்களே பணியாற்றி இருக்கிறார்கள்" என தெரிவித்தார். ஓலாவின் பியூச்சர் பேக்டரி முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்படும் நிறுவனம் என அகர்வால் ஏற்கனவே தெரிவித்து இருந்தார். பின்வரும் காலங்களில் 12,000 பெண்களை வேலைக்கு எடுக்க திட்டமிட்டுள்ள ஓலா நிறுவனம், உலகின் மிகப்பெரிய பெண்கள் நிர்வகிக்கும் கார் உற்பத்தி தொழிற்சாலை என்ற பெருமையை ஓலா பெரும் எனவும் அவர் கூறினார்.