Thailand Wedding Horror: குடிபோதையில் மணமகள் உட்பட 4 பேரை சுட்டுக்கொன்ற மணமகன்: இறுதியில் தற்கொலை.. உறவினர்களை பதறவைத்த சம்பவம்.!

மது உலகளவில் ஏற்படுத்தும் தாக்கங்கள் ஏராளம். அதனை ஒழித்தாலே உலகில் பாதி குடும்ப வன்முறை என்பது கட்டுக்குள் வந்துவிடும்.

Thailand Wedding Horror: குடிபோதையில் மணமகள் உட்பட 4 பேரை சுட்டுக்கொன்ற மணமகன்: இறுதியில் தற்கொலை.. உறவினர்களை பதறவைத்த சம்பவம்.!
Thailand Wedding Horror Bride & Groom Visual (Photo Credit: X)

நவம்பர் 28, பேங்காக் (Bangkok): தாய்லாந்து நாட்டில் உள்ள பேங்காக், நாம் க்ஹயிவ் மாவட்டத்தில் வசித்து வருபவர் சதுரோங் சுகிசுகி (வயது 29). அதே பகுதியை சேர்ந்த பெண்மணி காஞ்சனா பசுந்துயேக் (வயது 44). சுகிசுகி முன்னாள் இராணுவ வீரராகவும், பாரா - தடகள வீரராகவும் இருந்து வந்துள்ளார்.

கடந்த நவம்பர் 25ம் தேதி தம்பதிகளுக்கு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. அதனைத்தொடர்ந்து, வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றுள்ளது. திருமணம் முடியும்வரை நல்ல நிலையில் இருந்த மணமகன், வரவேற்பு நிகழ்ச்சிக்கு மதுபானம் அருந்திவிட்டு வருகை தந்துள்ளார்.

கையில் துப்பாக்கியுடன் வந்தவர், சற்றும் எதிர்பாராத தருணத்தில் மணப்பெண், அவரின் அம்மா, சகோதரி, 2 உறவினர்களை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்த சம்பவத்தில் மணப்பெண், அவரின் 62 வயது அம்மா கிங்தாங் கிளாஜோஹோ, 38 வயது தங்கை கோர்ன்னிபா மனடோ, 2 உறவினர்கள் என 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். Rain Alert 15 Districts: காலை 10 மணிவரை 15 மாவட்டங்களில் வெளுத்துவாங்கப்போகும் கனமழை; விபரம் இதோ.! 

4 பேரையும் சுட்டுக்கொலை செய்த சுகிசுகி, தானும் துப்பாக்கியால் சுட்டுத்தற்கொலை செய்துகொண்டார். இந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து உயிரிழந்தோரின் பிரேதத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சுகிசுகி எதற்காக அவரின் மனைவி உட்பட குடுமப்த்தினரை கொலை செய்தார்? என்பதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் உறவினர்கள் கண்முன் இந்த துயரம் நொடியில் நடந்து முடிந்துள்ளது.

கடந்த 3 ஆண்டுகளாக இருவரும் லிவிங் டுகெதர் வாழ்க்கை முறையில் இணைந்து இருந்ததாகவும், தற்போது திருமணம் நடைபெற்ற நிலையில், அதில் விருப்பம் இல்லாத மணமகன் கொடூர சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்பட்டுள்ளது.

(The above story first appeared on LatestLY on Nov 28, 2023 09:26 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).