Rowdy Killed: பட்டப்பகலில் கோவில் வளாகத்தில் பயங்கரம்; ரௌடி 6 பேர் கும்பலால் கொடூர கொலை.. ஸ்ரீரங்கத்தில் பேரதிர்ச்சி.!
உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று வந்த ரௌடியை, 6 பேர் கும்பல் சரமாரியாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் ஸ்ரீரங்கம் பகுதியில் நடந்துள்ளது.
ஜனவரி 28, திருவரங்கம் (Trichy News): திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் (Srirangam News), மூலத்தோப்பு பகுதியில் வசித்து வருபவர் தர்மராஜ். இவரின் மகன் அன்புராஜ். இவரின் மீது காவல் நிலையத்தில் பல வழக்குகள் உள்ள நிலையில், குற்றப்பதிவேட்டில் சி பிரிவு நபராக இருக்கிறார். இதனால் உள்ளூரில் ரௌடியாக கவனிக்கப்பட்டு இருக்கிறார். இன்று காலை வழக்கம்போல உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றவர், பின் மீண்டும் வீட்டிற்கு திரும்பிக்கொண்டு இருந்தார். ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தமிழக தலைவர் சென்னையில் கைது.. என்ஐஏ ரெய்டில் அதிரடி.!
6 பேர் கும்பல் வெறிச்செயல்:
அப்போது, ஸ்ரீரங்கம் கோவில் வளாகம் அருகே அன்புராஜை இடைமறித்த 6 பேர் கொண்ட கும்பல், அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றது. இதனால் படுகாயமடைந்த அன்புராஜ் அப்பகுதி மக்களிடம் தன்னை காப்பாற்றுமாறு உதவிக்காக அபயக்குரலிட்டார். பொதுமக்கள் சேர்ந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அங்கு அவரின் மரணம் உறுதி செய்யப்பட்டது.
காவல்துறை விசாரணை:
தகவல் அறிந்து வந்த ஸ்ரீரங்கம் காவல்துறையினர், அன்புராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணையை முன்னெடுத்தனர். அன்புவின் உறவினர்கள் ஸ்ரீரங்கம் மருத்துவமனைக்கு முன்பு குவிந்து போராடி வருகின்றனர். பட்டப்பகலில் மக்கள் கண்முன் ரௌடி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது, அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக திருச்சி, ஸ்ரீரங்கம் பகுதியில் ரௌடிகளுக்குள் ஏற்படும் மோதலில் கொலை சம்பவங்கள் நடப்பது அதிகரித்து வருகிறது.
(The above story first appeared on LatestLY on Jan 28, 2025 12:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

