Heart Chilling CCTV Footage: 11 வினாடிகளில் 19 முறை சதக்., சதக்.. மனைவியை கத்தரிக்கோலால் குத்திய கணவன்.. குடிக்க பணம் தராததால் வெறிச்செயல்.!

குடும்பத்தகராறில் ஆத்திரமடைந்த கணவர், தனது மனைவியை கொலை செய்ய எண்ணி மேற்கொண்ட அதிர்ச்சிகர செயல் சிசிடிவி கேமிராவில் வீடியோவாக வெளியாகி பதறவைத்துள்ளது.

Heart Chilling CCTV Footage: 11 வினாடிகளில் 19 முறை சதக்., சதக்.. மனைவியை கத்தரிக்கோலால் குத்திய கணவன்.. குடிக்க பணம் தராததால் வெறிச்செயல்.!
Husband Attack Wife With Scissor in Lucknow (Photo Credit: @SachinGuptaUP / X)

ஜனவரி 13, லக்னோ (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோ (Lucknow), தாலிகன்ச் பகுதியை சேர்ந்தவர் பிரிஜ்மோஹன் நிஷாத். இவரின் மனைவி சுமன். தம்பதிகளுக்கு ராகுல் என்ற மகன் இருக்கிறார். குடிபோதைக்கு அடிமையான நிஷாத், எந்த வேலைகளுக்கும் செல்லாமல் ஊரைச்சுற்றி வந்துள்ளார்.

மதுவுக்கு பணம் கேட்டு தொல்லை: அவ்வப்போது மனைவியிடம் குடிக்க பணம் கேட்டு தகராறு செய்வதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார். இதுதொடர்பாக பல சமயங்களில் காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு, அதிகாரிகள் நிஷாத்தை கண்டித்து அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பும் நிஷாத் தனது மனைவி சுமனிடம் பணம் கேட்டு இருக்கிறார்.

கத்தரிக்கோலால் குத்தி கொலை முயற்சி: பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்த பெண்மணி, அங்குள்ள மார்க்கெட் பகுதிக்கு சென்று வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி இருக்கிறார். அச்சமயம் அங்கு கத்தரிக்கோலுடன் வந்த நிஷாத், தனது மனைவியை பொதுமக்கள் முன்னிலையிலேயே கழுத்து, மார்பு, தலையில் சதக்., சதக் என குத்தினார். Jharkhand Shocker: வகுப்பு நண்பர்களுடன் பிரச்சனை: 11ம் வகுப்பு மாணவர் கொலை.. 2 மாணவர்கள் தலைமறைவு.! 

வழிப்போக்கரால் காப்பாற்றப்பட்ட உயிர்: 11 வினாடிகளில் 19 முறை பெண்ணின் உடலில் கத்தரிக்கோல் பாய்ந்தது. அங்கிருந்த மக்கள் அதிர்ச்சியுடன் செய்வதறியாது திகைக்க, வழிப்போக்கர் விரைந்து செயல்பட்டு சுமனை காப்பாற்றினார். உடனடியாக அறிந்து பெண்மணி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

குற்றவாளி கைது: இந்த விஷயம் தொடர்பாக சுமனின் மகன் ராகுல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் தப்பியோடிய நிஷாந்தை கைது செய்தனர். அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சுமன் தொடர்ந்து மருத்துவ சிகிச்சையில் இருக்கிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மதுப்பழக்கம் உடல் நலனுக்கு கேடு தரும்., உயிரை கொல்லும்.

இளகிய மனம் கொண்டவர்கள் விடியோவை பார்க்க வேண்டாம்.. அதிர்ச்சிதரும் காட்சிகள் உங்களின் பார்வைக்கு:

(The above story first appeared on LatestLY on Jan 13, 2024 07:52 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).