மே 08, நொய்டா (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கிரேட்டர் நொய்டா, செக்டர் 107 லோட்டஸ் குடியிருப்பில் சிறுமி ஒருவர் பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் சம்பவத்தன்று தனது அடுக்குமாடி குடியிருப்பின் வளாகத்தில் இருந்த நிலையில், அங்கு வந்த வளர்ப்பு நாய் ஒன்று அவரை திடீரென மூர்க்கமாகி பலமாக கையில் கடித்து இருக்கிறது. Superman First Look: டேவிட் கோரன்ஸ்வெட் நடிக்கும் சூப்பர்மேன்.. புதிய போஸ்டர் வெளியீடு..!
நாய் தாக்குதல்: குடியிருப்பு வளாகத்தில் இருந்த சிறுமி, லிப்டை திறந்து அதற்குள் குதித்து தனது உயிரை காத்துக்கொண்டார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த ஒருவர், நாயை விரட்டி சிறுமியை பாதுகாத்த நிலையில், சிறுமி தனது வீட்டிற்கு சென்று விசயத்தை கூறியுள்ளார். இதனையடுத்து, அவர்கள் சிறுமியை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். England's Mandate for Single-Sex Toilets: இனி ஒவ்வொரு பாலினத்தருக்கும் தனி தனி கழிப்பறைகள்.. இங்கிலாந்து அரசின் அதிரடி அறிவிப்பு..!
உயிருக்கு பாதகத்தை ஏற்படுத்தும் நாய்கள்: மேலும், இந்த விஷயம் குறித்து காவல் நிலையத்திலும் புகார் அளிக்க அவர்கள் முடிவு செய்துள்ள நிலையில், சிறுமி நாயால் தாக்கப்படும் பதைபதைப்பு வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. ராட்வீலர், பிட்புல் உட்பட பல உயிருக்கு பாதகத்தை ஏற்படுத்தும் நாய்களை மத்திய அரசு தடை செய்வதாக அறிவித்து, மாநில அரசு அது தொடர்பான நாய்களின் விற்பனை மற்றும் வளர்ப்பு போன்ற விஷயங்களை சேகரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தி இருக்கிறது.
नोएडा-सेक्टर-107 में लोटस-300 सोसायटी की लिफ्ट में कुत्ते ने बच्ची को नोचा #DOG #Noida #lifting #DOGBYTE pic.twitter.com/0EScGj4RzK
— Prashant Tripathi () May 7, 2024