Toilet (Photo Credit: Pixabay)

மே 07, லண்டன் (World News): பொதுவாக இங்கிலாந்தில் கடைகளுக்கு செல்லும் பொழுது அங்கு பொது கழிப்பறை மட்டுமே இருக்கும். அதாவது அந்த கழிவறையை ஆண், பெண் என இருவருமே பயன்படுத்திக் கொள்வோம். தற்போது இதற்கு இங்கிலாந்து அரசு ஒரு மாற்றத்தினை அறிவித்துள்ளது. அதன்படி இனிமேல் தொடங்கப்படும் உணவகங்கள், வணிக வளாகங்கள், அலுவலகங்கள் மற்றும் பொது கழிப்பறைகளில் ஆண், பெண் இருவருக்கும் தனித்தனி கழிவறைகள் (Single-Sex Toilets) அமைக்க வேண்டும் என்று அறிவித்துள்ளனர். மேலும் மூன்றாம் பாலினத்தவர்கள் ஆன திருநங்கைகள் பெண்கள் கழிப்பறையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளனர். KPY Bala And Lawrence Helping People: மீண்டும் கலக்கப்போவது யாரு பாலா மற்றும் லாரன்ஸ் கைகோர்ப்பு.. பெண்ணின் ஆட்டோ வாங்க வாங்கிய கடன்கள் அடைப்பு..!

இதற்காக பதினேழாயிரம் பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் 81% பேர் தனித்தனி கழிவறைகள் அமைப்பது மிகவும் அவசியமான ஒன்று என்று தெரிவித்துள்ளனர். இதன் மூலம் பெண்கள் மாதவிடாய் காலங்களில் சுதந்திரமாக செயல்பட முடியும் என்று கூறியுள்ளனர். அதே நேரத்தில் 82 சதவீத பேர் இது பிரிவினையை உருவாக்கும் என்று கூறியுள்ளனர். ஆனால் ஒவ்வொரு பாலினத்திற்கும் தனிப்பட்ட இடைவெளி மற்றும் மரியாதை கொடுக்கும் விதத்தில் தனித்தனி கழிவறைகள் இனிமேல் அமைக்கப்படும் என்று இங்கிலாந்து அரசு உறுதியாக அறிவித்துள்ளது. இதற்கான சட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என்றும் கூறியுள்ளனர். பொது கழிப்பறை கலாச்சாரம் என்பது பாதுகாப்பு இல்லாத சூழலையும் உருவாகும். இதனால் பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாவதும் அரங்கேறி வருவது குறிப்பிடத்தக்கது.