3 Aged Girl Murder: கால்களை துண்டித்து 3 வயது சிறுமி கொடூர கொலை; கடைக்குச்சென்ற சிறுமிக்கு நேர்ந்த குலைநடுங்கவைக்கும் பயங்கரம்.!
மாயமானதாக கருதப்பட்ட 3 வயது சிறுமியின் கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் சாக்கு மூட்டையில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட துயரம் உ.பி-யில் நடந்து நெஞ்சை பதறவைத்துள்ளது.
ஏப்ரல் 10, ராம்பூர் (Uttar Pradesh News): உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ராம்பூர் மாவட்டம், பிலாஸ்பூர், தாவணி கான்ஸ்பூர் பகுதியைச் சேர்ந்தவர் தனிஷ் அலி, மணல் வியாபாரியாக இருந்து வருகிறார். திருமணம் முடிந்து மனைவி மற்றும் அனைசா நூர் என்ற மூன்று வயதுடைய மகள் குழந்தையாக இருக்கிறார். இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை சிறுமி வீட்டிற்கு அருகே உள்ள கடையில் மெழுகுவர்த்தி வாங்க சென்றுள்ளார். பின் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் பதறிப்போன பெற்றோர், அவரை (Rampur Minor Girl Killed) தேடி அலைந்தும் காணாததால் உடனடியாக அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 25 Years of Padayappa: ஆறு படையப்பனுக்காக தவம்கிடந்த நீலாம்பரி... 25 ஆண்டுகளை நிறைவு செய்தது 'படையப்பா' திரைப்படம்.!
சடலமாக மீட்கப்பட்ட சிறுமியின் உடல்: புகாரை ஏற்ற காவல்துறையினர் சிறுமியை தேடி வந்த நிலையில், சாக்கு மூட்டை ஒன்றில் சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. சிறுமியின் கால்கள் இரண்டும் துண்டாக வெட்டப்பட்டு, வாய் டேப் கொண்டு ஒட்டப்பட்டு, பிளாஸ்டிக் பையால் முகம் மூடப்பட்டு, கைகள் கடத்தப்பட்ட நிலையில் சடலம் மீட்கப்பட்டது. இதனால் சிறுமி கொலை செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்த அதிகாரிகள், குடும்பத்தினர் தெரிவித்த தகவலின் பெயரில் முதல்கட்டமாக நான்கு பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பையும் ஏற்படடுத்தி இருக்கிறது. தனிப்படை காவல் துறையினர் வேறு கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
(The above story first appeared on LatestLY on Apr 10, 2024 11:24 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

