25 Years of Rajinikanth's Padayappa (Photo Credit: @Sakrevathi09 X)

ஏப்ரல் 10, சென்னை (Cinema News): கடந்த 1999 ஆம் ஆண்டு கே.எஸ் ரவிக்குமார் (KS Ravikumar) இயக்கத்தில், அருணாச்சலா சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர் ரகுமானின் (AR Rahman) அட்டகாசமான இசையில் உருவாகி வெளியான திரைப்படம் படையப்பா (Padayappa). இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் ரஜினிகாந்த் (SuperStar Rajinikanth), சிவாஜி கணேசன், ரம்யா கிருஷ்ணன் (Ramya Krishnan), சௌந்தர்யா, லட்சுமி, ராதாரவி, நாசர், அப்பாஸ், ப்ரீத்தா உட்பட பலரும் நடித்திருந்தனர்.

ஜப்பானில் மெகா வசூல்: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கடந்த ஏப்ரல் 10, 1999 அன்று வெளியான திரைப்படம் சர்வதேச அளவில் 7 இலட்சத்திற்கும் அதிகமான ஆடியோ கேசட்டுகளை விற்பனை செய்து மிகப் பெரிய அளவில் வெற்றியடைந்தது. மேலும், பிலிம்பேர் விருது, சிறந்த நடிகை மற்றும் தமிழ்நாடு மாநில விருது ஆகியவற்றையும் பெற்றது. ஜப்பான் நாட்டில் மட்டும் 50 ஆயிரம் அமெரிக்க டாலர் மதிப்பில் வெளியீடு உரிமைகளை பெற்றது.

100 நாட்களை கடந்து ஓடிய திரைப்படம்: அன்றைய மதிப்பில் மொத்தமாக ரூ.50 கோடிக்கும் அதிகமான வசூலை பெற்று சாதனை பட்டியலில் இடம்பெற்ற திரைப்படம், தமிழ்நாட்டில் மட்டும் 86க்கும் அதிகமான திரையரங்கில் 100 நாட்களைக் கடந்து திரையிடப்பட்டது. தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு நரசிம்மா என்ற பெயரில் வெளியிடப்பட்ட படம், 49 திரையரங்கில் 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாகவும் திரையானது. கிட்டத்தட்ட 4 மணி நேரம் ஓடும் அளவு எடுக்கப்பட்ட இத்திரைப்படம், கமலின் அறிவுரைக்கு பின்னர் இரண்டரை மணி நேரம் கடந்து காட்சிப்படுத்தப்படும் வகையில் சுறுக்கப்பட்டது. Teeneger Attacks by Pitbulll Dog: திடீரென மூர்க்கமாகி 15 வயது சிறுவனை கடித்து குதறிய பிட்புல் நாய்; அதிர்ச்சியில் உறைந்தபடி வேடிக்கை பார்த்த மக்கள்.! 

25 ஆண்டுகள் நிறைவு: முதலில் படத்திற்கு இரண்டு இடைவேளை விடலாம் என்று பேசி முடிக்கப்பட்ட நிலையில், கமலின் அறிவுரையால் படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. இப்படம் வெளியாகி சரியாக இன்றோடு 25 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர். எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்திலும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் பொருட்டு, என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர். மேலும், பல நகரங்களில் உள்ள திரையரங்குகளில், இன்று படம் மறுவெளியீடும் செய்யப்பட்டு இருக்கிறது. ரஜினி ரசிகர்கள் பலரும் திரையரங்குக்கு சென்று படம் பார்த்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

படத்தின் சுருக்கம்: வெளியூருக்கு வேலைக்கு சென்று விட்டு கிராமத்திற்கு திரும்பும் கதாநாயகன், தனது பூர்வீகமாக வீட்டை விட்டு வெளியேறி பல கஷ்டங்களை கடந்து சாதனை நாயகனாகவும், ஏழைகளின் தோழனாகவும் திகளுகிறார். அவரின் மீது ஆசைவைத்த பெண், இறுதிவரை திருமணம் செய்யாமல் வாழ, தனது இளம் பருவத்தில் நடந்த நிகழ்வுக்கு பழிவாங்க எண்ணி இறுதியில் மனம் திரும்பும் நிகழ்வுதான் படையப்பா. இதில் நாயகன் படையப்பன் தனக்கு வரும் இன்னலை எப்படி எதிர்கொள்கிறார்? நீலாம்பரியாக அசத்திய ரம்யா கிருஷ்ணனின் காட்சிகள் இன்றும் ரசிகர்கள் மனதில் இருந்து நீங்காதவை.

25 ஆண்டுகளை கடந்தாலும், நினைவில் இருந்து நீங்காத திரைப்படம்:

புல்லரிக்கவைக்கும் காட்சிகள்: