CCTV Video: கண்ணிமைக்கும் நேரத்தில் கைப்பையை தூக்கிக்கொண்டு ஓடிய நபர்; இரயில் நிலையத்தில் பகீர் சம்பவம்.!

டிக்கெட் முன்பதிவு செய்ய வந்த பெண்மணியின் கைப்பையை மர்ம நபர் ஒருவர் நொடியில் தூக்கிக்கொண்டு ஓட்டம் பிடித்தார். இரயில் நிலையத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.

CCTV Video: கண்ணிமைக்கும் நேரத்தில் கைப்பையை தூக்கிக்கொண்டு ஓடிய நபர்; இரயில் நிலையத்தில் பகீர் சம்பவம்.!
Hand Bag Robbery in Railway Station (Photo Credit: @TGIoffl X)

ஆகஸ்ட் 30, இராஜபாளையம் (Virudhunagar News): விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜபாளையம் (Rajapalayam), சேத்தூர் பகுதியைச் சேர்ந்த பெண்மணி வேணி. இவர் சம்பவத்தன்று மேல்மருவத்தூர் செல்வதற்காக இரயிலில் முன்பதிவு செய்ய இராசபாளையம் இரயில் நிலையத்திற்கு வருகை தந்துள்ளார். முன்பதிவு மையம் அருகே தனது கைப்பையை மற்றொரு இருக்கையில் வைத்துவிட்டு, அவர் அருகே அமர்ந்து இருந்துள்ளார். பின் அவர் முன்பதிவு மைய அதிகாரியுடன் பேசிக்கொண்டு இருந்தார். அச்சமயம், அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், பெண்ணின் கைப்பையை நோட்டமிட்டவாறு நொடிப்பொழுதில் எடுத்துச் சென்றார். Weather Update for Next 3 Hrs: அடுத்த 3 மணிநேரத்தில் 8 மாவட்டங்களில் மழை; சென்னை வானிலை ஆய்வு மையம்.! 

காவல்துறையினர் கோரிக்கை:

பெண்ணின் எதிர்திசையில் அமர்ந்து இருந்தவர், தனக்கான சமயம் கிடைத்ததும் கண்ணிமைக்கும் நேரத்தில் இலாவகமாக செயல்பட்டு திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டார். இந்த விஷயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்மணி அளித்த புகாரின் பேரில், இராஜபாளையம் இருப்புப்பாதை காவல்துறையினர் மற்றும் தெற்கு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேற்கூறிய நபர் குறித்த அடையாளம் தெரிந்தால், காவல் நிலையத்தை தொடர்புகொண்டு விபரம் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பயணியிடம் இருந்து கைப்பையை திருடிய மர்ம நபர் தொடர்பான சிசிடிவி வீடியோ: 

(The above story first appeared on LatestLY on Aug 30, 2024 08:29 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).