ஆகஸ்ட் 30, சென்னை (Chennai News): தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால், வடக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அடுத்த சில தினங்களுக்கு தமிழ்நாட்டில் பரவலான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு (Chennai Regional Meteorological Center) மையம், தனது நாளைய வானிலை (Tomorrow Weather) செய்திக்குறிப்பில் தெரிவித்து இருந்தது. இந்நிலையில், கோயம்புத்தூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரையில் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, திண்டுக்கல், நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடி-மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. TN CM US Visit: ரூ.450 கோடி செலவில், நோக்கியா நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்.. மொத்தமாக 5100 பேருக்கு வேலைவாய்ப்பு.! 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)