Man Masturbate at the Roadside: நடுரோட்டில் இளம்பெண்ணின் முன் சுயஇன்பம் செய்த இளைஞர்; அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்.!

பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் வகையில் செயல்படும் நபர்களை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுப்பதே பிற்காலத்தில் அவ்வாறான குற்றங்களை குறைக்க உதவி செய்யும்.

Man Masturbate at the Roadside: நடுரோட்டில் இளம்பெண்ணின் முன் சுயஇன்பம் செய்த இளைஞர்; அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்.!
Masturbate infront of Girl in WB (Photo Credit: @sirajnoorani X)

ஜூன் 25, பசீர்ஹாட் (West Bengal News): இந்தியாவில் நாளொன்றுக்கு 70க்கும் அதிகமான பலாத்காரங்கள் நடப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. சாலையில் நடந்து செல்லும் பெண் முதல், வீட்டில் தனியாக இருக்கும் பெண், அலுவலகத்தில் பணியாற்றும் பெண் என பெண்களுக்கு எதிரான துயரங்கள் ஒவ்வொரு இடத்திலும் தொடருகிறது. ஒருசில வீடுகளில் பெண்களின் விருப்பம் இன்றி கணவரே மனைவியிடம் அத்துமீறும் சோகமும் நடக்கிறது. இவ்வாறான பலாத்கார குற்றங்களை ஒழிக்க, பெண்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவோருக்கான தண்டனைகள் கடுமையாக வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வருகிறது. Battery Plant Fire Explodes: பேட்டரி தயாரிப்பு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து; 22 பேர் உடல் கருகி பரிதாப பலி.! 

நடுரோட்டில் இளைஞர் அதிர்ச்சி செயல்:

இதனிடையே, மேற்குவங்கம் மாநிலத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவத்தின் பதைபதைப்பு காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், சாலையில் இனம்பெண் ஒருவர் நடந்து வந்துகொண்டு இருந்தார். அவர் வருவதற்கு முன்னதாக பெண் வரும் வழியின் எதிர்திசையில் இருசக்கர வாகனத்தில் வந்தவர், சாலையோரம் வாகனத்தை நிறுத்துகிறார். பின் பெண் அருகில் வரும்வரை காத்திருந்த நபர், திடீரென நடுரோட்டில் பெண்ணை பார்த்தவாறு சுய இன்பம் (Man masturbates in front of Girl) மேற்கொள்கிறார்.

இதனை சற்றும் எதிர்பாராத பெண்மணி, கண்டும்-காணாதது போல அவ்விடத்தை பயத்துடன் சூதனமாக கடந்து தப்பிவிடுகிறார். பின் நொடியும் பொறுக்காத கயவன், அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பி செல்கிறார். இந்த அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகள், அங்கிருந்த கேமிராவில் பதிவாகி இருக்கின்றன. தற்போது இந்தவிஷயம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிக்கு வலைவீசப்பட்டுள்ளது.

(The above story first appeared on LatestLY on Jun 25, 2024 12:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).