Lithium Factory Fire in South Korea (Photo Credit: @nogulagsagain X)

ஜூன் 25, ஹவாஸோங் (World News): தென்கொரியா நாட்டில் உள்ள ஹவாஸோங் பகுதியில் லித்தியம் பேட்டரி தயாரிப்பு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் சீன நாட்டவர்கள் பலரும் வேலை பார்த்து வந்துள்ளனர். இதனிடையே, நேற்று தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி தொழிற்சாலையில் பணியாற்றிய 22 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். TN Assembly Session: தமிழ்நாடு சட்டப்பேரவையில் பதற்ற சூழல்; அதிமுக எம்.எல்.ஏக்கள் கூண்டோடு வெளியேற்றம்..! 

தொழிலாளர்கள் 20 பேர் பலி:

தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர், நீண்ட நேர போராட்டத்திற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்து பலியானோரின் உடலை மீட்டனர். இந்த தொழிற்சாலையில் 100 க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வந்த நிலையில், தொழிற்சாலையின் இரண்டாவது தளத்தில் தீ பிடித்து உயிர்ப்பலி நடந்துள்ளது. பலியான 22 பேரில், 20 பேர் வெளிநாட்டவர் ஆவார்கள். உயிரிழந்தோரின் உடல்கள் அடையாளம் காணாத வகையில் கருகி காணப்படுவதால், உடலை டிஎன்ஏ பரிசோதனைக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர்.

பேட்டரியில் இருந்து வெண்ணிற புகை வெளியேறிய 15 நொடிகளில் பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது. அதனைத்தொடர்ந்து, பயங்கர தீ பரவி 22 பேரின் உயிரை பறித்துவிட்டது. தீ விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

22 பேரின் உயிரை பறித்த சம்பவத்தின் பதைபதைப்பு காணொளி: