மார்ச் 30, புதுடெல்லி (New Delhi): உலகில் சமூக வலைத்தளங்களின் அறிமுகம் ஏற்பட்டதில் இருந்து, அதனை பயன்படுத்தும் ஒவ்வொருவரும் தங்களின் செயல்பாடுகளுக்கு ஏற்றவகையில் அதனை பயன்படுத்தி வருகின்றனர். இன்றளவில் யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ரீல்ஸ் எனப்படும் வீடியோ பதிவிடுவோரின் எண்ணிக்கை இலட்சக்கணக்கில் இருக்கிறது. Indian Navy Rescue Operation: அப்படிப்போடு.. அதிரடி காட்டிய இந்திய கடற்படை; கடத்தப்பட்ட கப்பல் மீட்பு., மாலுமிகள் மகிழ்ச்சி.!
இவர்களில் ஒருசிலர் கேளிக்கையான மற்றும் மக்கள் முகம்சுளிக்கும் வகையிலான செயல்களை செய்து, அதன் வாயிலாக மக்களிடம் பிரபலமாக நினைப்பதும் உண்டு. அவ்வாறான சர்ச்சை செயல்கள் பேருந்து நிலையம் முதல் இரயில் நிலையங்கள், வணிக வளாகங்கள் என தொடர்ந்து வந்தது. இந்நிலையில், இளம்பெண் ஒருவர் விமான நிலையத்தில் பயணிகளின் உடமைகளை அனுப்பும் அமைப்பில் படுத்துக்கொண்டு வருவது போன்ற ரீல்ஸ் வீடியோ வெளியாகி இருக்கிறது. நெட்டிசன்கள் கடுமையான கண்டனத்தை குவித்துள்ள இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
The virus has reached the airports too 🤡🤡 pic.twitter.com/RdFReWtWjH
— desi mojito 🇮🇳 (@desimojito) March 29, 2024