மார்ச் 30, புதுடெல்லி (New Delhi): சோமாலிய கடற்கொள்ளையர்களால், தனியாருக்கு சொந்தமான அல் காம்ப்பர் என்ற கப்பல் சிறைபிடிக்கப்பட்டது. அதிலிருந்து மாலுமிகள் அனைவரும் பிணைய கைதியாக்கப்பட்ட நிலையில், அரபிக் கடல் பகுதியில் கப்பல் நேற்று தென்பட்டதால் இந்திய கடற்படை அதிரடியாக களமிறங்கியது. இந்திய கப்பற்படை ஐ.என்.எஸ் திரிசூல் ஏவுகணை போர்க்கப்பலுடன் நிகழ்விடத்திற்கு விரைந்து துணிச்சலான மீட்பு பணியில் ஈடுபட்டது. United Airlines Flight Affect Air Turbelance: திடீரென மாறிய காற்றின் வேகம்; நடுவானில் தத்தளித்த விமானம்.. பயணிகள் உடல்நலக்கோளாறால் அவதி.!
மாலுமிகள் பத்திரமாக மீட்பு: சுமார் 12 மணி நேரம் நடந்த மீட்புப்படைக்கு பின்னர், 23 பாகிஸ்தானிய மாலுமிகள் மற்றும் கப்பல் பணியாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். போர்க்கப்பலுடன் விரைந்த இந்திய கடற்படை பேச்சுவார்த்தை நடத்தி அனைவரையும் மீட்டுள்ளது. ஈரான் பகுதியில் கடத்தப்பட்ட அல் காம்பர் கப்பல், அங்கிருந்து 2800 கி.மீ தொலைவில் இயக்கப்பட்டு அரபிக் கடல் வரை கொண்டுவரப்பட்டுள்ளது. அரபிக்கடலில் எல்லை வந்ததும், அது இந்திய கடற்படை கட்டுப்பாட்டில் இருக்கும் எல்லை என்பதால், பிராந்திய பாதுகாப்பு உறுதி செய்யும் பொருட்டு இந்த நடவடிக்கையில் கடற்படை ஈடுபட்டுள்ளது. Daniel Balaji: நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் காலமானார்; 48 வயதிலேயே நடந்த சோகம்.! குடும்பத்தினர் கண்ணீர்.!
பாலஸ்தீனிய போருக்கு பின் பதற்றம் அதிகரிப்பு: அரபிக்கடல் மற்றும் மத்திய வளைகுடா பகுதியில் பாலஸ்தீனியம் - இஸ்ரேல் இடையே நடைபெற்று வரும் போரின் காரணமாக, பாலஸ்தீனியத்திற்கு ஆதரவாக இருக்கும் நாடுகள் தொடர்ந்து வளைகுடா பகுதியை பதற்றத்தில் வைத்து சரக்கு கப்பல்களை கடத்துவது, தாக்கி அழிப்பது என சர்ச்சை செயல்களை தொடருகிறது. இதன் பாணியில் தற்போது சோமாலிய கடற்கொள்ளை கும்பலும் அதிர்ச்சி செயலில் ஈடுபட்டு இருக்கிறது.