ஜூலை 28, மங்களூர் (Viral Video): கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூர் மாவட்டம், மஞ்சனடி பகுதியில் மரக்கட்டைகளை பாரமாக ஏற்றுக்கொண்ட லாரி பயணம் செய்தது. இந்த லாரி அங்குள்ள நடேகல் நீர்வீழ்ச்சி அருகே சென்றுகொண்டு இருந்தது.
அப்போது, அங்குள்ள வளைவு ஒன்றில் லாரி திரும்பிய நிலையில், அப்போது எதிர்பாராத விதமாக பாரம் ஒருபக்கம் சாய தொடங்கியதால், லாரி தலைகுப்பற கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. Too much of good thing can harmful: அதிகளவு வாழைப்பழம் சாப்பிட்டால் இவ்வளவு பிரச்சனை ஏற்படுமா?.. வாழைப்பழ விரும்பிகளே கவனம்.!
இந்த விபத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் எவ்வித காயமும் இல்லை. ஓட்டுநர் லாரியின் நிலையை அறிந்ததும் கதவை திறந்து வெளியே குதித்து உயிர் தப்பினார்.
இவ்விஷயம் தொடர்பான பதைபதைப்பு வீடியோ காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி கேமிராவில் வெளியாகி இருக்கின்றன. மரக்கட்டை ஏற்றிவந்த லாரி ஒருநிமிடம் நின்று சென்றிருந்தால் சாலையின் முழு திசைக்கும் சென்று அவ்விடத்தில் திரும்பி இருக்கலாம். அஜாக்கிரதையால் விபத்து நடந்துள்ளது.
#Karnataka #Mangaluru Truck carrying plywood and on its way to Manjanadi from Natekal falls into a valley near a curve. None injured pic.twitter.com/ZLUm7XFkoX
— Siraj Noorani (@sirajnoorani) July 27, 2023