ஜூலை 28, சென்னை (Health Tips): அன்றாடம் தொடர் வேலைப்பளுவினால் ஓடிக்கொண்டிருக்கும் நமது உடலின் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டத்துக்களை வழங்கும் பழங்களில் வாழைப்பழம் (Banana) முதன்மையானது. இதனை சாப்பிட்டால் உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கும்.
உடலுக்கு தேவையான நோயெதிர்ப்பு சக்தியை வழங்கி, நமது உடல்நலனை பாதுகாக்கும். வாழைப்பழத்தில் இருக்கும் நார்சத்து, வைட்டமின், தாதுக்கள், மெக்னீசியம், சர்க்கரை, பொட்டாசியம், கார்போஹைட்ரேட் போன்றவை உடலுக்கு நன்மை தரும்.
செரிமான விசயத்திற்கு பேருதவி செய்யும் நார்ச்சத்தை கொண்டுள்ள வாழைப்பழம், குடலின் இயக்கத்தை ஒழுங்குபடுத்தும். ஆனால், இதனை அதிகம் சாப்பிட்டால் தீங்கு ஏற்படும். வாழைப்பழத்தில் சராசரியாக 100 கலோரி இருக்கும். ஆகா நாம் தினமும் 2 வாழைப்பழம் சாப்பிட்டால் போதும். Stefan Lainer Cancer: பிரபல ஆஸ்திரிய கால்பந்தாட்ட வீரர் ஸ்டீபன் லைனெருக்கு புற்றுநோய்; மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.!
அதற்கு மேல் சாப்பிடும் பட்சத்தில் உடலின் எடை அதிகரிக்கும். பொட்டாசியத்தின் அளவு காரணமாக தலைசுற்றல், வாந்தி, நாடித்துடிப்பு அதிகரித்தல் போன்ற பிரச்சனை ஏற்படும். வாழைப்பழத்தை அதிகம் சாப்பிட்டால் பற்களில் துவரம் ஏற்படலாம்.
வாழைப்பழத்தை சாப்பிட்டு பற்களை கொப்புளித்து தூங்குவது நல்லது. வைட்டமின் பி6 உடலுக்கு தேவையானது என்றாலும், அளவு அதிகமானால் நரம்பு பாதிப்பு ஏற்படலாம். சிலருக்கு ஒவ்வாமை, பக்கவிளைவும் உண்டாகும். பச்சை வாழைப்பழத்தில் ஸ்டார்ச் இருப்பதால், அதனை சாப்பிடுவது வாயு தொல்லை, வயிற்று வலி, மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வாகும்.
பழுத்த வாழைப்பழம் செரிமான விசயத்திற்கு நல்லது. இதனை அதிகமாகவும் எடுத்துக்கொள்ள கூடாது. நீரிழிவு நோயாளிகள் வாழைப்பழத்தை எப்போதாவது எடுத்துக்கொள்ளலாம். தினமும் சாப்பிட கூடாது. சிறுநீரக பிரச்சனை உள்ளவர்களும் பொட்டாசியம் நிறைந்த உனவுகளை தவிர்க்க வேண்டும்.