பிப்ரவரி 16, சாம்ராஜ்நகர் (Karnataka News): கர்நாடக மாநிலத்தில் உள்ள சாம்ராஜ்நகர் மாவட்டம், பி.ஜி பாளையம் பகுதியில் வசித்து வருபவர் குமார் (வயது 33). இவருக்கு திருமணமாகி மனைவி இருக்கின்றார். அன்றாடம் கூலித்தொழிலாளியாக வேலைபார்த்து வரும் குமாரின் வருமானத்திலேயே குடும்பம் நடத்தப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், இவரின் மனைவி ஸ்மார்ட்போன் பயன்படுத்தி வந்துள்ளார்.
எல்லைமீறி சென்ற ரீல்ஸ் மோகம்: அதில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ பார்க்க அடிமையானவர், பின்னாளில் அவரும் சுயமாக ரீல்ஸ் வீடியோ (Husband Suicide Wife Reels) எடுத்து தொடங்கி இருக்கிறார். சில நாட்கள் மனைவியின் செயல்பாடுகளை அவ்வப்போது கண்டித்தவாறு அமைதியாக இருந்த குமார், மனைவியின் செயல்பாடுகள் எல்லைமீறி செல்வதாக உணர்ந்து இருக்கிறார். Market Fire Accident: சந்தையில் பயங்கர தீ விபத்து; 7 பேர் உடல் கருகி பரிதாப பலி., தலைநகரில் நடந்த சோகம்.!
விரக்தியடைந்த குமார்: இதனால் இனி ரீல்ஸ் வீடியோ பதிவிட வேண்டாம் எனவும் கோரிக்கை முன்வைத்துள்ளார். கணவரின் கண்டிப்பு, அறிவுரை எதையும் கேட்காத மனைவி, ஒருகட்டத்தில் ரீல்ஸ் வீடியோ பதிவு செய்வதிலேயே மும்மரமாக இருந்து இருக்கிறார். இதனால் குமார் வாழ்க்கையில் விரக்தியடைந்து இருக்கிறார்.
மரத்தில் தூக்கிட்டு தற்கொலை: தனது மனைவி தான் சொல்வதை கேட்காமல் செயல்படுகிறார் என வேதனைப்பட்டவர், மரத்தில் தூக்கிட்டு தனது உயிரை தற்கொலை செய்து மாய்த்துக்கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்த காவல் துறையினர், குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கடிதம் எழுதவில்லை: அவர் கைப்பட எழுதிய தற்கொலை கடிதம் ஏதும் கிடைக்கவில்லை. இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.